கார்டோசாட்2 செயற்கைகோள் வெளியிட்ட முதல் நாள் புகைப்படம்
வேலுசாமி (Author) Published Date : Jan 24, 2018 13:00 ISTஇந்தியா
Technology News
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ முன்னதாக சுமார் 99 செயற்கைகோள்கள் இஸ்ரோவால் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 12-ஆம் தேதி காலையில் தனது 100 வது செயற்கைக்கோளான கார்டோசாட் -2 வை ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் பிஎஸ்எல்வி-40 மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதற்கான கவுண்டவுன் ஜனவரி 11-ஆம் தேதி காலை தொடங்கியுள்ளது. இந்த கார்டோசாட் -2 செயற்கைகோளின் எடை 710 கிலோ. இதனுள் நிறைய நானோ மற்றும் மைக்ரோ செயற்கைகோள்கள் அடங்கியிருந்தது.
இதன் மொத்த எடையானது 1323 கிலோவாக இருந்தது. இந்த பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட்டில் அமெரிக்கா, கொரியா, கனடா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளின் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது. மொத்தமாக 31 செயற்கைகோள்களை சுமந்து சென்றது. இந்தியாவின் 100 வது செயற்கைகோளாக விளங்கும் கார்டோசாட் - 2, பூமியின் இயற்கை வளங்களை கண்காணிப்பதற்காக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த ராக்கெட்டானது குறிப்பிட்ட தூரம் எட்டியதும் முதலில் LEO-P1 மற்றும் POC-P1 போன்ற செயற்கைகோள்கள் பிரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதனுள் இருந்த அனைத்து செயற்கைகோள்களும் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு அதற்கான இடங்களை அடைந்தது. இதனை அடுத்து இந்தியாவின் கார்டோசாட் - 2 செயற்கைக்கோள் தனது முதல் புகைப்படத்தை கடந்த ஜனவரி 16-ஆம் தேதி அனுப்பியது. இதனை தொடர்ந்து நேற்று (ஜனவரி 23) இந்தியாவின் நிலப்பரப்பை சார்ந்த அடுத்த புகைப்படங்களை அனுப்பியுள்ளது. இந்த முதல் நாள் புகைப்படத்தில் மத்திய பிரதேசத்தின் இந்தோர் (INDORE) பகுதி இடம் பெற்றது. அடுத்த புகைப்படத்தில் குஜராத்தில் உள்ள போர்பந்தர் என்று பகுதியை புகைப்படம் எடுத்துள்ளது.