பச்சோந்தி நிறம் மாறுவது எப்படி ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பு
வேலுசாமி (Author) Published Date : Jan 25, 2018 18:02 ISTWorld News
இந்தியா
பச்சோந்திகள் நிறம் மாறுவது சார்ந்த ஆராய்ச்சிகள் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக ஆய்வாளர்கள் பச்சோந்திகள் பொதுவாக இடத்திற்கு இடம் மாறுகிறது என்று தெரிவித்தனர். பின்னர் பச்சோந்திகள் அதன் எண்ணப்படி தான் நிறத்தை மாற்றுகின்றன. இதன்மூலம் சுற்றி உள்ளவர்களுக்கோ அல்லது அதன் இனத்திற்கோ ஏதோ சொல்ல முயல்கிறது. பச்சோந்திகள் நிறத்தை மாற்றுவதற்கு உடலில் இருக்கும் நிறமிகள் தான் காரணம் என்று தெரிவித்தனர்.
பிராங்க் க்ளாவ் என்பவர் தலைமையில் ஜெர்மனியின் முனீச் நகரில் உள்ள விலங்கியல் துறை சார்பில் தற்போது ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இவர் மேற்கொண்ட ஆய்வில், பச்சோந்திகள் தனது நிறத்தை மாற்றி சைகைகளை தருவது உடம்பில் உள்ள எலும்புகள் மூலமாக தான் என்பது தெரியவந்துள்ளது. தோல்களில் உள்ள புளுரோசென்ஸ்கள் மற்றும் முகம், தலை ஆகியவற்றில் உள்ள எலும்புகள் தான் காரணம் என்பதை கண்டுபிடித்துள்ளனர். புளுரோசென்ஸ் எனப்படுவது மின்காந்த கதிர்வீச்சுகளை வீசுவது அல்லது ஒளிக்கதிர்களை உறிஞ்சி வெளியிடும் சக்தி ஆகும்.
இவைகள் பச்சோந்தியின் உடலில் உள்ளது. பொதுவாக பச்சோந்தியின் கண்கள் நிற ஒளியை வெளியிடக்கூடியது. இதனால் புளுரோசென்ஸ் உடலில் இருப்பதால் சதுப்பு நில பரப்பிலும் ஒளியை மாற்றக்கூடியது.என்பதை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு முன்னதாக பச்சோந்தியின் உடலில் புறஊதா கதர் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த புளுரோசென்ஸ் உடலில் இருப்பதால் அனைத்து இடங்களிலும் நிறத்தை மாற்றக்கூடியது என்று தெரிவித்துள்ளனர். ஆய்வாளர்களின் இந்த புதிய கண்டுபிடிப்பு எதிர்கால ஆய்வுகளில் முக்கிய பங்காற்றும் என்று அவர்கள் வெளியிட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது.