இந்தியாவின் 73 சதவீத செல்வம் வெறும் 1 சதவீத மக்களிடம்
வேலுசாமி (Author) Published Date : Jan 23, 2018 14:29 ISTஇந்தியா
Business News
சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஹாக்ஸ்பாம் (Oxfam) என்ற நிறுவனம் 2017-ஆம் ஆண்டில் உலகின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டது. அதில் இந்தியாவின் 73 சதவீத செல்வமானது வெறும் 1 சதவீத பணக்காரர்களிடம் இருப்பதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. மேலும் 67 கோடி மக்களின் முன்னேற்றம் 1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையானது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் பொருந்தும் என்று ஹாக்ஸ்பாம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.7 பில்லியன் மக்களின் வருமானத்தில் முன்னேற்றமே இல்லை என்றும் உலக அளவில் 82 சதவீத பொருளாதார வளர்ச்சியானது 1 சதவீதம் மக்களிடம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் 20.9 லட்சம் கோடியாக பணக்காரர்களின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. இந்தியாவில் 10 சதவீத பணக்காரர்கள் 73 சதவீத மக்களின் சொத்துக்களை வைத்துள்ளனர். மேலும் 37 சதவீத பணக்காரர்கள் வசதியாக வாழ்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஒரு பிரபலமான கடையில் பணிபுரியும் ஊழியர்களின் வருட சம்பளத்தை கிராமப்புறத்தில் பணிபுரியும் சாதாரண மக்கள் பெறுவதற்கு 941 வருடங்கள் தேவைப்படுகிறது. அதாவது பிரபல கடையில் பணிபுரியும் நிர்வாகியின் 17.5 நாள் சம்பளத்தை பெறுவதற்கு கிராமபுற மக்கள் 50 வருடங்கள் உழைக்க வேண்டும் என்றும் ஹாக்ஸ்பாம் (Oxfam) மேற்கொண்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து உலக பொருளாதார மாநாட்டில், தலைவர்களுடன் ஆலோசிக்க உள்ளதாகவும் ஹாக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.