வருமான வரித்துறையினரிடம் வசமாக சிக்கிய ஆவணங்கள்
ராசு (Author) Published Date : Nov 12, 2017 22:44 ISTPolitics News
இந்தியா
சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீதிகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் 600 சொத்துக்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டவை என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 6-ஆம் தேதி பரோலில் வந்த சசிகலா ரகசியமாக சொத்துக்களை உறவினர்கள் பெயரிலும் அவரது பினாமி பெயரில் பாத்திரம் பதிவு செய்ததும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது. சசிகலா, இளவரசி சேர்மனாக இருக்கும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் ஜெயா டிவி உள்பட 100கும் மேற்பட்ட நிறுவனங்களின் பெயர்களை ஏற்கனவே இளவரசியின் மகள் கிருஷ்ண ப்ரியா மற்றும் மகன் விவேக் ஆகியோர் பெயர்களில் மாற்றி அமைத்துள்ளனர். மேலும் பரோலில் வெளிவந்த சசிகலா இரவும் பகலும் மாறி மாறி பெயர் மாற்றம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பத்திர பதிவு செய்ய 6 மூத்த பத்திர பதிவு அதிகாரிகளை ஒரு ஹோட்டலுக்கு வரவைத்து 3 நாட்கள் அவர்களை தங்க வைத்து பத்திரப்பதிவு வேலைகளை செய்துள்ளனர். கடந்த மாதம் 7-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை 5 நாட்களில் மொத்தமாக 600கும் மேற்பட்ட சொத்து ஆவணங்களை வேறு நபர் பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த 7-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடந்த பத்திரப்பதிவு மாற்ற பட்டியலை வைத்து இந்த சோதனை மேற்கொண்டுள்ளனர். பெயர் மாற்றம் செய்யப்பட்ட நபர்களிடம் துருவி துருவி விசாரிக்கும் போது 300 கும் மேற்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த ஆவணங்கள் அனைத்தும் சுட சுட புத்தம் புதியதாக கையெழுத்து போடப்பட்ட ஆவணங்களை பார்த்து வருமான வரித்துறையினர் ஆடி போய்யுள்ளனர். மேலும் கைப்பற்றிய ஆவணங்களின் உண்மையான மதிப்பினை சரிபார்க்கும் வேலை முடிந்ததும் இந்த சோதனையை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பிரிவுகளுக்கு மாற்றம் செய்ய தயாராகி வருகிறது வருமான வரித்துறை.
இந்த சோதனையில் ஒருவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட போது குளியல் அறையில் வித்தியாசமான முறையில் 2 குழாய்கள் இருப்பதை கண்டறிந்தனர். இதன் ஒரு குழாயில் தண்ணீர் வந்தது. மற்றொரு குழாயில் சோதனை நடத்திய போது அதில் தண்ணீர் வரவில்லை தங்கக்காசுகள் கொட்டியது. இந்த தங்க காசுகளில் மதிப்பு பல கிலோ இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் சசிகலா இயக்குனராக உள்ள பேன்சி ஸ்டீல், ரெயின்போ ஏர் பிரைவேட் லிமிடேட், சுக்ரா கிளப், இந்தோ-தோகா கெமிக்கல்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் மூடப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையே சசிகலா, இளவரசி உறவினர்கள், பினாமிகள் பெயரில் 10 போலி நிறுவனங்கள் தொடங்கி அதன்மூலம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பலகோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர்.
முதற்கட்ட சோதனையில் கிட்டத்தட்ட 1012 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இரண்டாவதாக நடத்திய சோதனையில் நீலாங்கரையில் உள்ள சசிகலா அண்ணன் மகன் வீட்டில் கணக்கில் வராத 7கிலோ தங்க நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். மூன்றாவது நாளாக இன்றும் சோதனை நடைபெறும் என்று வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். அப்போதுதான் முழு தகவல் தெரியவரும். வருமான வரித்துறையினர் சோதனையை அடுத்து அமலாக்கத்துறையும், சிபிஐயும் களத்தில் இறங்க தயாராக உள்ளது.