எரிசக்தி திட்டங்கள் மூலம் 3லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பு
வேலுசாமி (Author) Published Date : May 17, 2018 10:35 ISTBusiness News
பன்னாட்டு தொழிலாளர் அமைப்பான ஐஎல்ஓ (International Labour Organization - ILO), உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் பிரச்சனையும், தொழிலாளர் பற்றாக்குறையையும் தீர்மானிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நோக்கங்கள் கொண்ட ஒரு முக்கிய அமைப்பாகும். ஐஎல்ஓவின் தலைமை செயலகம் ஜெனிவா மற்றும் சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ளது. 1919இல் நிறுவப்பட்ட இந்நிறுவனம் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் தொழிலாளர்களை பணியமர்த்தி 99 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச தொழிலாளர் மாநாடு ஜெனிவாவில் ஜூன் மாதத்தில் நடந்து வருகிறது.
இந்த வகையில் இந்த வருடமும் வரும் ஜூன் மாதத்தில் சர்வதேச தொழிலாளர் மாநாடு நடக்கவுள்ளது. விரைவில் மத்திய அரசு காற்றாலை மற்றும் சூரிய ஆற்றல் போன்ற எரிசக்தி திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மூன்று லட்சம் மக்களுக்கு வேலை கிடைக்கவுள்ளதாக பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த எரிசக்தி திட்டம் மூலம் 175ஜிகாவாட் (GigaWatt) மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன்படி 175ஜிகாவாட் (GigaWatt) மின்சாரத்தை உற்பத்தி செய்த பின்னர் 3 லட்சம் மக்களுக்கும் வேலை கிடைத்திருக்கும்.
இது தவிர வருகின்ற 2030ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 2,40,00,000 மக்களுக்கு வேலை கிடைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் ஐஎல்ஓ (ILO) தெரிவித்துள்ளது. விரைவில் செயல்படுத்தவுள்ள இந்தியாவின் எரிசக்தி திட்டத்தை போன்றே இதர நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், எஸ்தோனியா, டென்மார்க் போன்ற நாடுகளும் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். இதனால் சர்வதேச அளவில் இந்த துறை மக்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளதாகவும் ஐஎல்ஒ தெரிவித்துள்ளது. மேலும் தற்போது பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு சார்பில் பசுமை பொருளாதாரம் (Green Economy) என்ற பெயரில் 24 மில்லியன் தொழிலாளர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.