மீண்டும் 399 ரூபாய் திட்டத்தில் மாற்றத்தை செய்துள்ள ஏர்டெல்
வேலுசாமி (Author) Published Date : May 19, 2018 11:56 ISTBusiness News
20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கி வந்த ஏர்டெல் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பிறகு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைக்க குறைந்த கட்டணத்தில் ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது அதிக சலுகைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு மக்கள் மாறி வருகின்றனர். இதனால் சலுகைகளை வழங்குவதிலும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குள் கடும் மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.
அதன்படி ஏற்கனவே வழங்கி வந்த திட்டங்களிலும் இலவச சலுகைகளை வழங்கி அதிரடி மாற்றங்களை செய்தும் புது புது திட்டங்களை அறிவித்தும் வருகின்றன. இந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் தற்போது முன்னதாக வழங்கி வந்த 399 ரூபாய் திட்டத்தில் புதியதாக மாற்றங்களை செய்துள்ளது. இந்த திட்டத்தில் முதலில் இலவச வாய்ஸ் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் நாளொன்றுக்கு 1GB போன்ற திட்டங்களை 28 நாட்களுக்கு வழங்கி வந்தது.
பிறகு இந்த திட்டத்தினை 70 நாட்களாக நீடித்தது. இந்நிலையில் தற்போது இந்த திட்டத்தினை மீண்டும் 84 நாட்களாக நீடித்துள்ளது. 399 திட்டம் மட்டுமல்லாமல் 149 திட்டத்திலும் மாற்றங்களை செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தற்போது 28 நாட்கள் வேலிடிட்டியில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற சேவைகளை வழங்கி வருகிறது.