Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஏர்டெல் நிறுவனம் மூலம் ஏர்செல் வாடிக்கையாளர்கள் சுலபமாக போர்ட் கோட் பெறலாம்

ஏர்செல் வாடிக்கையாளர்கள் சுலபமாக போர்ட் கோட் பெறலாம். photo credit Aircel and Airtel.

தமிழ்நாட்டில் ஏர்செல் நிறுவனம் சில நாட்களாக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் சேவையை தர முடியவில்லை. ரிலையன்ஸ் நிறுவனத்தை அடுத்து ஏர்செல் நிறுவனமும் மூடும் நிலைமைக்கு தள்ளப்பட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் இது போன்ற நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் வகையில், அவர்களின் மொபைல் சேவைகள் துண்டிக்கும் முன்பே அவர்களை வேறு நிறுவனத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

இல்லையெனில் குறுஞ்செய்தி வாயிலாக தகவல் தெரிவித்திருக்க வேண்டும். இவ்வாறு செய்து இருந்தால் சாமான்ய மக்கள் முதல் தொழிலதிபர்கள் வரை யாரும் அவதிபட்டிருக்க மாட்டார்கள். கடந்த திங்கள் கிழமை வரை ஏர்செல் நிறுவனத்தின் டவர் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே வேலை செய்து கொண்டு இருந்தது, அன்று இரவு முதல் அந்த சேவையும் முற்றிலுமாக துண்டிக்கபட்டது. தொழில் செய்வோருக்கு இது பெரும் சிரமமாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனம் போர்ட்கோட் (PORT Code) பெறுவதற்கு சுலபமான முறையை செயல்படுத்தி உள்ளது. உங்கள் ஏர்செல் மொபைலுக்கு போர்ட்கோட் (PORT Code) பெற, உங்களது ஏர்செல் நிறுவனத்தின் சிம் கார்டை கையில் வைத்துக்கொள்ளவும்.  பின் நண்பர்கள் அல்லது உறவினர்கள் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருந்தால் அவர்களின் மொபைலில் இருந்து "9840112345" எண்ணிற்கு கால் செய்யவும், தானியங்கி வாய்ஸ் மூலம் உங்களை வழிநடத்தும்.

அதில் உங்களது ஏர்செல் நிறுவனத்தின் எண்களை பதிவு செய்யவும். பின் ஏர்செல் நிறுவனத்தின் சிம் கார்டில் உள்ள கடைசி 5 எண்ணை பதிவு செய்யவும். இவ்வாறு செய்கையில், குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் உங்களது நண்பர்கள் அல்லது உறவினர்கள் ஏர்டெல் மொபைலுக்கு போர்ட்கோட் (PORT Code) வந்து சேரும். பல மொபைல் நெட்ஒர்க் நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுவதால் மேலே குறிப்பிட்ட முறையை தாங்களாகவே செய்து கொள்ளலாம்.

தங்களுக்கு, நாங்கள் குறிப்பிட்ட முறை கடினமாக இருந்தால், அருகில் உள்ள ஏர்டெல் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்று உதவியை நாடுங்கள்.

ஏர்டெல் நிறுவனம் மூலம் ஏர்செல் வாடிக்கையாளர்கள் சுலபமாக போர்ட் கோட் பெறலாம்