ஒரு வருடத்திற்கு 300 ஜிபி டேட்டா - ஏர்டெல் புதிய திட்டம்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Nov 14, 2017 19:44 ISTBusiness News
தற்போது உள்ள சூழ்நிலையில் டெலிகாம் நிறுவனங்கள் ஒன்றோடு ஒன்று போட்டிபோட்டு மோதி கொள்கிறது. அப்படி மோதும் போது புதுப்புது திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் மூலம் தொடக்கத்தில் மக்களுக்கு பயனளிக்கும் விதமாக இருந்தாலும் இறுதியில் மக்களை புலம்ப விடுகிறது. இது வழக்கமாக நடைபெறும் நடைமுறைதான். இதனை அடுத்து தற்போது பாரதி ஏர்டெல் 300 ஜிபி அளவிலான டேட்டாவை 360 நாட்களுக்கு வழங்க இருக்கிறது இது 3999 ரூபாய்க்கான திட்டமாகும்.
மேலும் 1999 ரூபாய் திட்டத்தில் 125 ஜிபி அளவிலான டேட்டா 180 நாட்களுக்கு வழங்க இருக்கிறது. தினமும் அன்லிமிடட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக அனுப்பும் வசதியும் உள்ளது. இதனை அடுத்து 999 ருபாய் திட்டத்தில் 90 நாட்களுக்கு 60 ஜிபி வரையிலான டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தை பற்றிய அறிவிப்பை தனது ஏர்டெல் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 மற்றும் அதற்கும் அதிகமான தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்யும் போது ரூ.2,500 வரை கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை நவம்பர் 25-ம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.