இன்டர்நெட் டேட்டாவுக்காக மட்டும் பிஎஸ்என்எல் வழங்கியுள்ள புதிய பிளான்
வேலுசாமி (Author) Published Date : May 18, 2018 16:35 ISTBusiness News
மத்திய அரசின் சொந்த தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், தனது வாடிக்கையாளர்களுக்கு தினுசு தினுசாக புதிய சலுகைகளை வழங்கி கவர்ந்து வருகிறது. இந்த ஆண்டு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்து 150 மில்லியனை தாண்டியுள்ளது. இதனால் தங்களது பயனாளர்களை கவர சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் வழங்கிய 118 பிளானை தொடர்ந்து தற்போது 98 ரூபாய் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்றைய வாடிக்கையாளர்களுக்கு இன்டர்நெட் இல்லையென்றால் பொழுது கழிக்க முடிவதில்லை.
இதனால் பெரும்பாலும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இன்டர்நெட்டில் கூடுதல் சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் வழக்கமாக வழங்கி வரும் ஆலிமிடேட் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவற்றை தவிர்த்து தற்போது இன்டர்நெட்டுக்காக மட்டும் புதிய 98 பிளானை வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயனாளர்கள் மொத்தமாக 39GB இன்டர்நெட்டை நாளொன்றுக்கு 1.5GB என்ற கணக்கில் 26நாட்கள் வேலிடிட்டியில் உபயோகப்படுத்தலாம். பிஎஸ்என்எல்லின் இந்த 98ரூபாய் திட்டம் ஏற்கனவே ஜியோ அதே 98ரூபாயில் வழங்கி வருகிறது.
ஆனால் இந்த திட்டத்தில் இன்டர்நெட்டை தவிர வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 300 எஸ்எம்எஸ் போன்றவற்ற கூடுதலாக வழங்கி வருகிறது. மேலும் ஜியோவின் இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 2GB அளவிலான டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியில் உபயோகப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிஎஸ்என்எல் வழங்கியுள்ள இந்த 98ரூபாய் திட்டம் இன்டர்நெட் பயன்பாட்டுக்காக மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜியோவை தவிர இந்த திட்டத்தை ஏர்டெல் நிறுவனமும் கையாண்டு வருகிறது. ஏர்டெல் நிறுவனம் 92ரூபாய் என்ற திட்டத்தில் ஏழு நாட்களுக்கு 6GB இன்டர்நெட்டை வழங்கி வருகிறது.