டிஜிட்டல் பண பரிமாற்றத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும் நிறுவனங்கள்
ராசு (Author) Published Date : Mar 14, 2018 12:23 ISTBusiness News
இந்தியாவில் டிஜிட்டல் பண பரிமாற்றம், திரு நரேந்திர மோடி பிரதமராவதற்கு முன்பே செயல்பட்டு வந்தது. ஆனால் அப்போது பண பரிமாற்றத்தின் வளர்ச்சி அந்த அளவிற்கு இல்லையென்று சொல்லலாம். டிஜிட்டல் முறை கட்டாயம் இல்லாமல் இருந்ததாலும், டிஜிட்டல் முறை அந்த அளவிற்கு மக்களுக்கு சுலபமாக இல்லாமல் இருந்ததாலும் மக்களிடம் வரவேற்பை பெறவில்லை.
இதனை வங்கியின் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலமே செய்து கொள்ள முடியும். இதில் "NEFT" மற்றும் "RTGS" போன்ற முறைகள் மட்டுமே இருந்தது, இதில் ஒருவரிடம் இருந்து பணம் மற்றவர்களுக்கு சென்றடைய "NEFT" முறையில் பணம் அனுப்பினால் குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகும். இதுவே பெரிய தொகையாக இருந்தால் "RTGS" மூலம் அனுப்பினால் குறைந்தது 5 நிமிடத்திற்குள் சென்றடையும். இதன் பிறகு "IMPS" மூலம் குறைந்த தொகையை உடனடியாக அனுப்பும் முறை வந்தது.
தற்போது டிஜிட்டல் பண பரிமாற்றம் மிக சிறந்த முறையிலும், பாதுகாப்பாகவும், சாமானிய மக்கள் சுலபமாக பரிவர்த்தனை செய்யும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் அதற்கு ஒரு முக்கிய பங்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு உண்டு. மறைமுகமாக சொல்வது என்றால் பிரதமர் அவர்களின் கட்டாயத்தினால் இந்த அளவிற்கு மக்கள் டிஜிட்டல் முறையை உபயோகபடுத்த தள்ளப்பட்டனர் என்று கூறினாலும் இது நல்ல முறையில் வளர்ச்சி பாதையில் தான் சென்றுள்ளது.
டிஜிட்டல் முறையை மக்களுக்கு எளிய வகையில் சிறப்பாக செய்ததில் "PAYTM" நிறுவனத்தை குறிப்பிடலாம், இந்த நிறுவனம் மட்டுமில்லாமல் இதுபோன்ற பல நிறுவனங்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டது. இதில் சில நிறுவனங்கள் அரசின் பண பரிமாற்றத்தின் சட்ட திட்டங்களை பின்பற்ற முடியாமல் மூடின.
தற்பொழுது உள்ள சூழ்நிலையில், டிஜிட்டல் முறையை மிக எளிமையான முறையில் செயல்படுத்தும் பல நிறுவனங்கள் புது திறமையுடன் களமிறங்கியுள்ளது. அதில் மிக எளிய முறை என்றால் கூகுள் நிறுவனத்தின் "TEZ" என்ற மொபைல் செயலியும், மக்கள் அன்றாட உபயோகிக்கும் "Facebook" நிறுவனத்தின் "Whatsapp" செயலியும் ஒன்று. இரண்டு நிறுவனங்களும் ஒரே யுக்தியான "UPI" முறையை பின்பற்றி வங்கிகளின் உதவியுடன் பண பரிமாற்றத்தை சுலபமாக்கியுள்ளது.
"TEZ" செயலியை விட நாம் அதிகம் உபயோகிக்கும் "Whatsapp" யாருக்கு வேண்டுமானாலும் நண்பர்களிடேம் பேசிக்கொண்டே அனுப்பலாம். இதற்கு ஒரு முக்கிய விதிமுறை, நமது மொபைல் எண் எந்த வங்கியில் இணைக்கப்பட்டுள்ளதோ அந்த வங்கிகளை இணைத்து கொண்டால் எந்த நேரத்திலும் பண பரிவர்த்தனை செய்யலாம். உதாரணத்திற்கு, நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை "ICICI" வங்கி கணக்கில் வைத்துஇருந்தால், "Whatsapp" இல் நீங்கள் "ICICI" பேங்க் தேர்வு செய்தால் மட்டுமே போதும்.
தானாகவே "Whatsapp" உங்கள் வங்கியின் சர்வர் மூலம் மொபைல் எண்ணை சரிபார்த்து, 'OTP (One Time Password)' எனப்படும் முறையில் குறிப்பிட்ட இலக்க எண் கொண்ட குறியீட்டை வரவழைத்து பதிவு செய்து, உங்கள் வங்கியை இணைந்துவிடும். இதுவே "ICICI" வங்கியில் நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை இரண்டு வங்கி கணக்குகளுக்கு மேல் இணைத்து இருந்தால், இரண்டு வங்கி கணக்கின் எண்ணெயும் (Bank Account Number) காண்பித்து, ஏதாவது ஒன்றை தேர்வு செய்து இணைத்துக்கொள்ளலாம்.
வங்கி கணக்கை இணைத்த பின்பு யாருக்கு பணம் அனுப்பினாலும், பெற்றாலும் இணைக்கப்பட்ட வங்கியின் இருப்பில் உள்ள பணம் பரிமாறிக்கொள்ளப்படும். இதற்கு தற்பொழுது எந்த ஒரு சேவை கட்டணமும் இல்லை.
குறிப்பு : ஆதார் எண்ணை வங்கி கணக்கில் இணைத்து இருந்தால், பண பரிவர்த்தனை பாதுகாப்பான முறையில் நடக்கும். இன்றைய தேதி படி, வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மார்ச் 2018 மாதத்தில் இருந்து கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.