Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விற்பனையை அல்லும் ப்ளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் டேஸ்

நேற்று முதல் ப்ளிப்கார்ட் நிறுவனம் புதிய அதிரடி சலுகைகள் கொண்ட திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவின் பிரபல முன்னணி வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புது சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்று முதல் ப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் என்ற புதிய அதிரடி சலுகைகள் கொண்ட திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இந்த சலுகையானது வரும் மே 16-ஆம் தேதி வரை மட்டுமே வழங்கவுள்ளனர். இந்த அதிரடி சலுகையில் பல மின்னணு சாதனங்கள், மொபைல் போன்களுக்கு அதிகபட்ச சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் முன்னதாக அறிவிக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் இதற்காக காத்திருக்கும் தருவாயில் நேற்று இந்த திட்டத்தினை துவங்கியுள்ளனர். தற்போது ஆன்லைனில் வாடிக்கையாளர்கள் மும்முரமாக சலுகைகளை எதிர்பார்த்து ஆர்டர் செய்து வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. 99 ஆயிரம் வரை இருந்த ஐபோன் எக்ஸ் மற்றும் கூகுள் பிக்சல் 2 எக்ஸல் மொபைல்களின் விலையை  81,999 ரூபாய்க்கு குறைத்து 13,391 ரூபாய் வரை தள்ளுபடி செய்துள்ளனர்.

சாம்சங் கேலக்சி எஸ் 8 மாடல் முன்னதாக 49,990 ரூபாயாக இருந்தது. தற்போது 12 ஆயிரம் தள்ளுபடி செய்து 37,990 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். மேலும் மின்னணு சாதனங்களான லேப்டாப், டிவி, குளிர்சாதன பெட்டி, கேமிரா போன்ற பல பொருட்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4999 ரூபாய்க்கு மேல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட வங்கி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 10 சதவீதம் வரையிலும் தள்ளுபடி செய்ய உள்ளனர். இது தவிர மேலும் பல பொருட்களுக்கு சதவீதம் வரையிலும் தள்ளுபடிசெய்துள்ளனர். இதனால் பெரும்பாலான மக்கள் ப்ளிப்கர்ட் தளத்திற்கு விரைந்து புக்கிங்கை துவங்கயுள்ளனர்.

விற்பனையை அல்லும் ப்ளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் டேஸ்