உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி ஜெப் பெஸோஸ் முதலிடம்
வேலுசாமி (Author) Published Date : Mar 07, 2018 16:30 ISTBusiness News
ஒவ்வொரு ஆண்டும் உலகின் 500 பணக்காரர்கள் குறித்த தகவலை ஆய்வு செய்து போர்ப்ஸ் பத்திரிகை அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது இந்த ஆண்டின் உலக பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பல ஆண்டுகளாக முதல் இடத்தை தக்க வைத்து கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில்கேட்ஸ் இந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்கு தள்ள பட்டுள்ளார்.
முதல் இடத்தை அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெஸோஸ் பிடித்துள்ளார். இந்த புதிய பட்டியலின்படி ஜெப் பெஸோஸ் 112 பில்லியன் டாலருடன் முதல் இடத்தில் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு கடந்த வருடத்தில் மட்டும் 59 சதவீதம் அதிகரித்துள்ளதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. இரண்டாவதாக 90 பில்லியன் டாலருடன் பில்கேட்ஸ் உள்ளார். இதனை அடுத்த மூன்றாவது இடத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர் வாறன் பப்பட் உள்ளார்.
இதன் பிறகு நான்காவது இடத்தில் பிரான்ஸ் நாட்டின் தொழிலதிபர் பெமார்டு அமுல்ட் என்பவரும் ஐந்தாவது இடத்தில் பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சுக்கர்போர்க் என்பவரும் உள்ளனர். இந்தியாவின் பணக்காரர்களில் முதல் இடத்தில் உள்ள முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 19 வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற பெருமையை டென்சென்ட் நிறுவன தலைவர் மா ஹூடெங் பெற்றுள்ளார்.
இவர் இந்த பட்டியலில் 17வது இடத்தில் 45 பில்லியன் டாலரில் உள்ளார். போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்த பட்டியலில் உலக பணக்கார நாடுகளில் அமெரிக்கா 585 நபர்களுடன் முதல் இடத்திலும், சீனா 373 நபர்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்த பட்டியலில் புதியதாக 259 நபர் இடம் பிடித்துள்ளனர். இதே போல் 121 நபர் இந்த பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.