Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2025.
All Rights Reserved

198ரூ 299ரூ திட்டத்தில் 2200வரை கேஷ்பேக் சலுகை வழங்கும் ஜியோ

ஜியோ, தனது 198 மற்றும் 299 திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு புதிய கேஷ்பேக் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.

பிரபல முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் இதர தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட அதிகப்படியான சலுகைகளை வழங்கி அதிகப்படியான மக்களை கவர்ந்து வருகிறது. தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு சலுகை திட்டங்களை வழங்கி வருவதால் ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்களும் ஜியோவுக்கு போட்டியாக அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது.

ஆனாலும் ஜியோவின் சலுகைகளுக்கு இதர நிறுவனங்கள் ஈடு கொடுக்க முடியவில்லை. இதனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஜியோவின் பக்கம் திரும்பி உள்ளனர். ஜியோவும் வாடிக்கையாளரை கவர ஆலிமிடேட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், இன்டர்நெட் பேக் போன்றவையை இதர நிறுவனங்களை விட அதிகமாக வழங்கி வருகிறது. இது தவிர தனது புதிய திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் சலுகைகளையும் வழங்கி வருகிறது.

அந்த வகையில் தனது 198ரூபாய் மற்றும் 299 ரூபாய் திட்டத்தின் மூலம் புதியதாக 4G ஸ்மார்ட்போனை வாங்கி 198ரூபாய் மற்றும் 299 ரூபாய் திட்டத்தில் சேரும் புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்களுக்கு 2200 வரை கேஷ்பேக் சலுகையை வழங்கவுள்ளதாகவும் ஜியோ விளம்பரப்படுத்தி வருகின்றனர். இந்த கேஷ்பேக் சலுகையை பெற ஜியோ வாடிக்கையாளர்கள், உடனடியாக 198 மற்றும் 299 ரூபாய் திட்டத்தில் சேர்ந்து 2200 கேஷ்பேக் சலுகையினை உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.

198ரூ 299ரூ திட்டத்தில் 2200வரை கேஷ்பேக் சலுகை வழங்கும் ஜியோ