ஸ்மார்ட்போன்களுக்கு இன்சூரன்ஸ் வழங்கும் ஹுவாய் இந்தியா
விக்னேஷ் (Author) Published Date : May 25, 2018 15:28 ISTBusiness News
சைனாவின் பிரபல மொபைல் தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாய் (Huawei), இந்தியாவிலும் ஏராளமான இடங்களில் தனது கிளைகளை நிறுவி உள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ஹுவாய் P20 லைட் (Huawei P20 lite) ஸ்மார்ட்போன் விற்பனையில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. 19:9 புள் டிஸ்பிளே, 24MP பிரண்ட் கேமிரா மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் போன்ற அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் விற்பனையில் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.
மேலும் இந்த மொபைலின் சிறப்பம்சமாக நீங்கள் போனை லாக் செய்து மீண்டும் ஆன் செய்யும் போது கண் சிமிட்டினால் கூட அன்லாக் ஆகும். தற்போது வாடிக்கையாளர்களிடம் நல்ல முன்னேற்றம் கண்டு வரும் ஹுவாய் ஸ்மார்ட்போன்களுக்கு இன்சூரன்ஸ் முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தினை ஹுவாய் இந்தியா(Huawei India) மற்றும் வைன் அஸ்சிஸ்ட் (Wine Assist) நிறுவனங்கள் இணைந்து தனது குறிப்பிட்ட ஹுவாய் (Huawei) மற்றும் ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு இன்சூரன்ஸ் வழங்கவுள்ளது.
இந்த இன்சூரன்ஸ் திட்டம் வர்த்தக தலமான அமேசான் தலத்தில் ரூபாய் 1249 முதல் ஆரம்பமாகிறது. இதன் வேலிடிட்டி ஒரு ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தினை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹுவாய் P20 லைட் (Huawei P20 lite), ஹுவாய் P20 (Huawei P20) மற்றும் அனைத்து ஹானர் (Honor) ஸ்மார்ட்போன்களுக்கும் வழங்க உள்ளது. இந்த புதிய திட்டம் மூலம் மேற்குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்கள், வேலிடிட்டி காலத்திற்குள் தண்ணீரில் விழுந்தாலோ அல்லது ஏதேனும் விபத்து ஏற்பட்டாலோ சரி செய்து கொள்ளலாம்.