Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நமக்கென்றே தனியாக சமூக வலைத்தளத்தை உருவாக்க வேண்டும் - ஆனந்த் மஹிந்திரா

பேஸ்புக் தகவல் திருட பட்டதற்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா நமக்கே நாமே ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உலகில் மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருப்பவை சமூக வலைத்தளங்கள். சிலர் சமூக வலைத்தளங்களிலே முடங்கி கிடப்பதும் உண்டு. இத்தகைய சமூக வலைத்தளங்களை வைத்து நல்லது கேட்டது இரண்டையுமே செய்ய முடிகிறது. ஆனால் இத்தகைய சமூக வலைத்தளங்கள் நமக்கே எதிராக திரும்பும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

உலகில் பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. கடந்த ஒரே மாதத்தில் மட்டும் பேஸ்புக் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2.2 பில்லியனை தாண்டியுள்ளது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் பயன்பாட்டாளர்களின் தகவலை வைத்து முறைகேடாக நடந்துள்ளது.

இந்நிறுவனம் இந்தியாவின் பாஜக, காங்கிரஸ் முதல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் தேர்தலில் அரசியல் காட்சிகளை வெற்றியடைய செய்ய, இந்தியாவின் கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஓவலேனோ பிசினஸ் இன்டெலிஜென்ஸ் (ovleno business intelligence) நிறுவனத்திற்கு பயனாளர்களின் தகவலை முறைகேடாக கொடுத்துள்ளது. தற்போது இது குறித்து பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த செய்தியறிந்து உலகம் முழுவதும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது இது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. ஏராளமான மக்கள் பேஸ்புக் செயலியிடமிருந்து வெளியேறிவிட்டனர். தற்போது இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களுள் ஒருவரான அனந்த் மஹிந்திரா இது குறித்து முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். இவர் தனது டிவிட்டரில் "இது நமக்கான தருணம். நமெக்கென சிறந்த செயல்பாடுடன் இயங்க கூடிய ஒரு சமூக வலைத்தளத்தை நாமே உருவாக்குவோம். இதனை உருவாக்க இந்தியாவில் ஏதேனும் நிறுவனங்கள் உள்ளதா. இளம் தலைமுறையினர் இது குறித்த நல்ல திட்டம் வைத்திருந்தால் நான் முதலீடு செய்யவும் தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இவரை தொடர்ந்து மஹிந்திரா குழுமத்தின் டிஜிட்டல் பிரிவின் தலைவர் ஜஸ்பிரீத் பின்தரா, "#Social3.0" செயல்பாடு கொண்ட சமூக வலைத்தளமாக இருந்தால் தகவல்கள் பாதுகாப்புடனும், சிறப்பாகவும் செயல்பட உதவியாக இருக்கும்" என ஆலோசனை வழங்கினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஆனந்த் மஹிந்திரா, நன்றி தெரிவித்து இந்த திட்டத்தில் உதவியாக இருக்கவும் சிறந்த குழுவை தேர்ந்தெடுக்க உதவு செய்யுமாறும் ஜஸ்பிரித் பின்தராவை கேட்டு கொண்டுள்ளார்.

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ராவின் இந்த முடிவுக்கு ஏராளாமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இளம் தலைமுறையினருக்கும், இந்தியாவில் இயங்கி வரும் பல ஸ்டார்ட்டப் நிறுவனங்களுக்கும் இது பொன்னான வாய்ப்பாகும். இந்த வாய்ப்பை தவறவிடாமல், இதனை செய்தியாக கருதாமல் வாய்ப்பாக கருதி, இளம் தலைமுறையினர் உபயோகப்படுத்தி கொள்ள வேண்டும். இந்தியர்களுக்கு தனியாக சமூக வலைத்தளங்கள் உருவாக்குவது சாத்தியமில்லை என்று நினைக்கலாம். ஆனால் சீனாவில் 'Sino Weibo' என்ற இணையதளம் அவர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. இது சாத்தியமில்லை என்று நினைக்காமல் சிறிது முயற்சி செய்யுங்களேன்.

நமக்கென்றே தனியாக சமூக வலைத்தளத்தை உருவாக்க வேண்டும் - ஆனந்த் மஹிந்திரா