நெதர்லாந்தில் வேலை வாய்ப்புகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
ராசு (Author) Published Date : Aug 14, 2018 18:13 ISTBusiness News
மக்கள் அடர்த்தி அதிகமாக காணப்படும் நெதர்லாந்து, உலகின் மக்கள் தொகை பெருக்கத்தில் 68வது இடத்தில் உள்ளது. காற்றாலைகள் மற்றும் சுரங்கங்களுக்கு பேர் போன இந்நாட்டில் 25சதவீத நிலப்பரப்புகள் கடல் மட்டத்திற்கு கீழே உள்ளது. நெதர்லாந்தின் தலைநகரமாக விளங்கும் ஆம்ஸ்டர்டாம் நகரில் தான் அதிக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நாட்டில் ஒவ்வொரு வருடமும் காலி பணியிடங்களுக்கான எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் காலியிடங்கள் எண்ணிக்கை முந்தைய காலாண்டை விட அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் வரையில் 2,51,000 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுளள்து. இதன் படி இரண்டாவது காலாண்டில் மட்டும் 16,000 எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த தகவல் படி, காலி பணியிடங்கள் அனைத்து துறைகளிலும் அதிகரித்து கொண்டே வருகிறது. வணிகத்துறையில் 4,000மும், ஹோட்டல் மற்றும் கேட்டரிங் துறையில் 3,000மும், பிசினஸ் மற்றும் கல்வி துறையில் 2,000மும் இரண்டாவது காலாண்டில் மட்டும் அதிகரித்துள்ளது.
இதில் நிதி சேவை துறையில் மட்டும் முன்பை விட இந்த முறை குறைந்துள்ளது. மேலும் தொழிலாளர் துறையில் (Labour Market) காலியிடங்கள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு காலியிடங்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 76 ஆயிரமாக உயர்ந்துள்ளது. காலி இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சுய வேலை பார்ப்போர் எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்துள்ளது. நெதர்லாந்தில் மட்டுமல்லாமல் இன்டர்நெட், ஆண்டிராய்டு வந்ததில் இருந்து சுய வேலைபார்ப்போர் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது.