Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சாமானிய மக்கள் மீது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கரிசனம்

தற்பொழுது அபராத தொகையை மட்டும் குறைத்து இருப்புத்தொகையை குறைக்காதது சாமான்ய மக்களுக்கு நிறைவான செய்தி அல்ல.

இந்தியாவின் சிறந்த வங்கியாக கருதப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பெரும்பாலான சிறு கிராமங்களிலில் இருந்து பெரிய நகரங்கள் வரை தனது கிளைகளின் மூலமாக குறைந்தது 20 கோடி வாடிக்கையாளர்களை தனது வங்கி கணக்கில் வைத்துள்ளது. GST வருவதற்கு முன்பாக வங்கி கணக்கின் குறைந்த அளவு இருப்பு தொகை 500 ரூபாயாக இருந்தது. பின்னர் 5000 ரூபாயாக  அறிவித்தது. சாமான்ய மக்களின் அன்றாட மாத கூலியை விட அதிகம். இதன் பிறகு 3000 ரூபாயாக குறைத்து கொண்டது.

இதில் வேதனை என்னவென்றால் இந்த இருப்பு தொகை நடைமுறைகளை பற்றி சாமானிய மக்களுக்கு தெரியவில்லை. தங்களது வங்கி கணக்கில் இருந்த பணம் காணாமல் போக அதிர்ச்சியடைந்து வங்கி அதிகாரிகளை அணுகிய பின்னர் தான் புதிய நடைமுறைகளை பற்றி தெரிந்து கொண்டார்கள். அவர்களது சேமிப்பு தொகை அபராத தொகை மூலமாக காணாமல் போனதால் மிகவும் வேதனை அடைந்தனர். இதன் மூலம் நல்ல வளர்ச்சி அடைந்த, சாமான்ய மக்களின் வங்கி என்று கருதப்பட்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தற்போது தனியார் வங்கியை போலானது.

கோயம்பத்தூர் நகரில் உள்ள வாடிக்கையாளரிடம் விசாரித்தபோது மிகவும் மன வருத்தத்துடன் குறிப்பிட்டார். தான் சம்பாதிக்கும் பணம் முழுவதும் மாத செலவிற்கே செலவாகிவிடும் நிலையில், ரூபாய் 3000 இருப்புத்தொகையாக வைப்பது மிகவும் கடினமாகவே உள்ளது. நாட்டை ஏமாற்றி பல்லாயிரம் கோடிகளை இழந்து விட்ட வங்கிகள், அந்த தொகையை சரிக்கட்ட எங்களை போல் நடுத்தர மக்களின் பணத்தை அபராத தொகையாக பிடுங்குகிறார்கள் என வருத்தப்பட்டார்.

தற்பொழுது இருந்த மெட்ரோ நகரங்களில் அதிகபட்ச அபராத தொகையை ரூபாய் 50+GST இருந்து ரூபாய் 15+GST யாக குறைத்துள்ளது. சிரிய நகரங்களில் அதிகபட்ச அபராத தொகை ரூபாய் 40+GSTஇல் இருந்து 12+GST ரூபாயாக குறைத்துள்ளது. கிராம பகுதிகளில் அதிகபட்ச அபராத தொகை ரூபாய் 40+GST இருந்து 10+GST ரூபாய் வரை குறைத்துள்ளது. தற்போது அபராத தொகையை மட்டும் குறைத்து கொண்டு, குறைந்த பட்ச இருப்பு தொகையை குறைக்காதது சாமானிய மக்களுக்கு நிறைவான செய்தி அல்ல.

 

சாமானிய மக்கள் மீது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கரிசனம்