இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 24 போலியான பல்கலை கழகங்கள் பட்டியல்
வேலுசாமி (Author) Published Date : Apr 25, 2018 11:53 ISTEducation News
மாணவ மாணவியர்கள் தங்களது அறிவினை வளர்த்து கொள்ளவும், பெற்றோர்கள் மற்றும் குடும்பங்களை காக்கவும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்கின்றனர். நமது நாட்டில் தற்போதைய கல்வியின் நிலை தரமற்றதாக உள்ளது. பணத்திற்காக ஆசைப்படும் சில பண முதலைகள் பணத்தை சம்பாதிக்க போலியான தனியார் கல்லூரிகளை திறந்து மாணவர்களின் கல்வியை பறித்து வருகின்றனர். இது தவிர இந்த போலியான அரசு உரிமம் பெறாத கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் லட்சம் லட்சமாக பணத்தை செலவு செய்கின்றனர்.
மாணவர்களிடம் எவ்வளவு சுரண்டினாலும் அவர்களுக்கு போதுவதில்லை. ஒரு சான்றிதலுக்காக லட்சம் லட்சமாக செலவு செய்யும் மாணவர்களுக்கு அந்த சான்றிதழும் செல்லாது என்பது தெரிவதில்லை. இத்தகைய அவலம் நாட்டின் பல பகுதிகளில் நடந்து கொண்டு தான் வருகிறது. நாட்டில் போலி மருத்துவர்கள், கல்லூரிகள், பொறியாளர்கள் என அனைத்தும் போலியானதாகவே மாறிவிட்டது. இதற்கெல்லாம் வெறும் காகிதத்தில் உருவாக்கப்பட்ட பணம் மட்டுமே காரணமாக அமைகிறது. நாட்டில் இது போன்ற குற்ற செயல்களுக்கு கடுமையான சட்டங்கள் இல்லாமல் போனதும் ஒரு காரணம்.
தற்போது நாட்டில் 24 போலியான பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக பல்கலை கழக மானியக்குழு தெரிவித்து இதற்கான பட்டியலையும் வெளியிட்டுள்ளது. மேலும் மாணவர்கள் போலியானது என்று அறியாமல் பணத்தை கொடுத்து ஏமாறாமல் இருக்கவே இந்த பட்டியலை பல்கலை கழக மானிய குழு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி அரசு பெறாமல் செயல்பட்டு வரும் பல்கலை கழகங்களில் 8 பல்கலைகழகங்கள் புது டெல்லியிலும், உத்திரபிரதேசத்தில் ஏழு பல்கலை கழகங்களும் செயல்பட்டு வருகின்றன. இது தவிர கேரளா, கர்நாடகா, அலிகர், மதுரா, பிரதாப்கர், நாக்பூர், பீகார், ரோர்கேலா, ஒடிசா, கான்பூர் மற்றும் புதுச்செரி போன்ற மாநிலங்களில் தலா ஒரு பல்கலைக்கழகங்களும், அலகாபாத்தில் இரண்டு பல்கலைக்கழகங்களும் போலியாக செயல்பட்டு வருவதாக அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.