உடல் நல ஆரோக்கியத்திற்கு உதவிடும் சில உணவு வழிமுறைகள்
வேலுசாமி (Author) Published Date : Nov 23, 2017 22:19 ISTHealth News
உடல் நலம், ஆரோக்கியம், ரத்த அழுத்தம் போன்றவற்றை சீராக பராமரிக்க மருத்துவமனைக்கு சென்று மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டிய கட்டாயம் தேவையில்லை. நாம் அன்றாடம் உண்ணும் உணவில் மாற்றங்கள் செய்தாலே உடல் நலத்தை சிறப்பாக பராமரிக்கலாம். அந்த வகையான உணவு வகைகளை பார்க்கலாம்.
1. மன அழுத்தம் என்பது வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. நாம் உண்ணும் உணவில் காளான், சோயா பால், முட்டை ஆகியவற்றை சேர்த்துக்கொள்வதன் மூலம் வைட்டமின் டி குறைவதை தடுக்கலாம்.
2.கவலை, நரம்புத்தளர்ச்சி, தூக்கமின்மை இவற்றிற்கு கார்போஹைட்ரேட் குறைவதே காரணம், பல்வேறு தானியங்கள், புழுங்கல் அரிசி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் கார்போஹைட்ரேட் குறைபாட்டை தடுக்கலாம்.
3. மூளைக்கும், மன நலனுக்கும் புத்துணர்வு அளிக்க பீன்ஸ், சோயா, பருப்புகள், இறைச்சி, பருப்பு வகைகள், பன்னீர் ஆகிய புரதசத்து நிறைந்த உணவுகள் சேர்த்து கொள்ள வேண்டும்.
4. மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் செர்ரி பழ வகைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. திராட்சை, செர்ரி பழங்கள், கீரைகள் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.
5. நல்ல மனநிலையை ஊக்குவிக்கும் உணவு பட்டியலில் வெங்காயமும் இடம்பிடித்திருக்கிறது. வெங்காயத்தையும், இஞ்சியையும் உணவில் சேர்ப்பது புற்றுநோய் பாதிப்பில் இருந்து காக்கவும் உதவுகிறது. காளான்கள் மன ஆரோக்கியத்திற்கு நல்லவை. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது.
6. தக்காளி பழத்தில் போலிக் அமிலம் மற்றும் ஆல்பா- லிபோயிக் அமிலம் ஆகியவை அதிகம் உள்ளன. இவை இரண்டும் மனச்சோர்வுக்கு எதிராக போராடும் வல்லமை படைத்தவை. தக்காளி பழத்தை மற்ற காய்கறிகளுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
7. பீன்ஸை உணவில் சேர்த்து கொள்வது இருதயத்திற்கு நல்லது.