இன்றளவும் பழவகைகளில் நிற கலவையும் கெமிக்கல்லும்
ராசு (Author) Published Date : Mar 17, 2018 09:44 ISTHealth News
நாங்கள் மற்ற ஒரு பதிவில் தர்பூசணி பழத்தில் சாயும் கலப்பு பற்றியும், எவ்வாறு தர்பூசணி பலத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று விலகினோம். 5% மக்கள் நாங்கள் கூறியதை பொய் என்றார்கள், அவர்களுக்காக இந்த பதிவு வீடியோ ஆதாரத்துடன். இது இரண்டு வருடம் பழைய வீடியோ தான், ஆனால் இன்றும் நடக்கும் இது தொடர்கதையாக தான் உள்ளது. 95% மக்கள் எங்கள் பதிவை நம்பினாலும், 5% மக்களையும் ஆரோகியமான பழங்களை சாப்பிட வைப்பதற்கும், விழிப்புணர்வோடு இருப்பதற்கும் இந்த பதிவு.
இந்த வீடியோவில், ஒருவர் மார்கெட்டிற்கு பழங்கள் எடுத்து செல்லுமுன், அந்த பழங்களின்நி றத்திற்கேற்ப அதற்க்கு தேவையான நிறங்களை சேர்கிறார். இவர் நிரம் சேர்க்கையில், அந்த பழங்கள் பல பல வென்று புதியதை போல் தெரிகின்றது. இந்த பழங்களை நாம் உண்ணும் போது, சாயத்தில் உள்ள ராசயங்களால் கேன்சர் நோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இரண்டாவது வீடியோவில் ஒருவர் மிக துணிச்சலுடன் விற்காமல் போன காய்கறிகளை எவ்வாறு திரும்ப புதியதை போல் சந்தைக்கு அனுப்புவது மற்றும் பழங்களுக்கு ஊசி மூலம் கெமிக்கல் செலுத்தி காய்களின் அளவை பெரிது படுத்துவது என்று விளக்குகிறார்.
நாங்கள் அனைவர்க்கும் புரிய வைக்க நினைப்பது, எதையும் உடனடியாக கிடைக்க வேண்டும் என நினைப்பதில் தவறேதும் இல்லை, குறிப்பிட்டவையை தவிர நாம் இந்த அவசர உலகத்தில் அவசரமாக பெற நினைத்தால், ஆபத்தில் தான் வந்து முடியும். நாம் இயற்கையாக வாழ கற்றுக்கொண்டால், நமக்கு பின் வரும் சந்ததியினர் வாழ்வு சிறப்பாக அமையும். மக்களின் தேவையை பணமாக மாற்ற நினைக்கும் இந்த உலகில் வடிக்கையாளர்களான நமக்குத்தான் விழிப்புணர்வு இருக்க வேண்டும், விற்பவர்களுக்கு அல்ல. விவசாயிடம் இதை பற்றி கேட்டபோது, உடனடி விளைச்சல் பெறுவதற்கே சிலர் இவ்வாறு ஊசி போடுகின்றனர். முடிந்த வரை எந்த கீரை வகையாக இருந்தாலும், காய்கறிகளாக இருந்தாலும், வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்து சாப்பிடுவது நல்லது. பழத்திற்குள் ரசாயனம் கலந்திருந்தால், கண்டுபிடிப்பது கடினம், சில சமயம் பழங்களை வெட்டிய பின் ஒருவகையான வாடையை வைத்து தெரிந்து கொள்ளலாம், முடிந்த வரை ரசாயன காய்கறிகளை உண்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
நாங்கள் Stage3 News ஊடகத்தை ஆரம்பித்த நோக்கமே மக்களுக்கு விழிபுணர்வு ஏற்படுத்தவே, போலியான தகவல்களை தருவதற்கு அல்ல. சந்தையில் விற்கும் அணைத்து விற்பனையாளர்களும் இதை விரும்புவதில்லை, ஒரு சில விற்பனையாளர்கள் தான் இவ்வாறு செய்கிறார்கள். எனினும் நாம் விழிப்புணர்வோடு இருப்பது நல்லதே.