Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கேன்சர் நோயை சுலபமாக கண்டுபிடிக்க புதிய இயந்திரம்

Wearable device captures cancer cells from blood. Image MaxPixel

கேன்சர் நோயை சுலபமாக கண்டுபிடிக்க புதிய இயந்திரம் அறிமுகப்படுத்தவுள்ளது. இது பயோப்சி (biopsy) முறையில் இருந்து விடுபட சிறந்த மாற்று முறையாகும். மருத்துவ உலகில் பல சாதனைகள் நடந்து கொண்டிருக்கும் தருணத்தில், கேன்சர் போன்ற கொடிய நோய்க்கு ஒரு வழி கிடைக்காத என்று பலரும் காத்து கொண்டிருக்கின்றனர். 

கேன்சர் நோயின் ஆரம்ப கால சிகிச்சைகள் பலரையும் நோயில் இருந்து முற்றிலும் குணப்படுத்தியுள்ளது. கேன்சர் நோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்தால், அதற்கு தேவையான உடனடி சிகிச்சைகள் பல உள்ளன, முறையாக பின்பற்றினால் கண்டிப்பாக குணமடையலாம்.

கேன்சர் நோயிற்காக பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கிறது, அதில் ஒரு வளர்ச்சியாக கேன்சர் செல்களை கண்டறிய புதிய கருவி கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக பயோப்சி (biopsy) முறையில் தான் கேன்சர் செல்களை கண்டறிய முடியும், அதற்காக பின்முதுகில் உள்ள எலும்பில் செல்களை எடுத்து கேன்சர் செல்களை கண்டறிய ஆய்வுக்கு அனுப்புவது வழக்கம், இது நோயாளிகளுக்கு மிகுந்த வலியை கொடுக்கும், ஆனால் விரைவில் வலி சென்றுவிடுமளவிற்கு பொறுத்துக்கொள்ள கூடியது.

இந்த கடுமையான முறையையே அணைத்து மருத்துவமனையிலும் பின்பற்றுகின்றனர். தற்பொழுது கண்டுபிடித்துள்ள கருவி அணிந்து கொள்ளகூடிய வகையில் இருப்பதால், நோயாளிகளுக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாமல் கேன்சர்  செல்களை கண்டறியலாம். 

இந்த கருவியை கண்டு பிடிக்க மருத்துவர்கள், மனத்தனின் கேன்சர் செல்களை நாய்க்கு செலுத்தி ஆராய்ச்சி மேற்கொண்டு வெற்றி அடைந்துள்ளதால், அடுத்து ஐந்து வருடத்திற்குள் கேன்சர் நோயால் பாதிப்படைந்த மனிதர்களிடம் மேற்கொள்ளும்  ஆராய்ச்சியின் மூலம் இந்த கருவி விரைவில் உலகெங்கும் உள்ள மருத்துவமனையில் பயன்படுத்து வரும் என இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட மருத்துவர்கள் ஹேய்ஸ் (Dr. Hayes) மற்றும் சுனிதா நக்ராத் (co-author Sunitha Nagrath, Ph.D.) அறிவித்துள்ளனர்.

Wearable device captures cancer cells from blood. Image Tae Hyun Kim, University of Michigan.

கேன்சர் நோயை சுலபமாக கண்டுபிடிக்க புதிய இயந்திரம்