கடன் தொல்லையில் தற்கொலைக்கு முயன்றவருக்கு நேர்ந்த சோகம்
விக்னேஷ் (Author) Published Date : May 08, 2018 16:18 ISTஇந்தியா
கரூரை சேர்ந்தவர் ஞானபிரகாசம், இவருக்கு வயது 50. இவர் கரூரில் வெங்கமேடு என்ற பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக கடன் தொல்லையால் சிக்கி அவதிப்பட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான இவர் தற்கொலை செய்வதே மேல் என துணிந்து தற்கொலை முடிவை எடுத்துள்ளார். பின்னர் ராமக்ரிஷ்ணபுரம் என்ற பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றை கண்டு விரைந்து வந்து குதித்துள்ளார்.
ஆனால் அவரின் துரதிஷ்டம் அந்த பகுதியில் மழை இல்லாமல் கிணற்றில் கால் அடி தண்ணீர் மட்டுமே இருந்துள்ளது. தற்கொலை செய்ய வந்த ஞானப்பிரகாசம், கால் அடி தண்ணீரில் குதித்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் என்னை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக அலறியுள்ளார். இவரின் சத்தத்தை கேட்டு அப்போது மாடு மேய்க்க வந்த நபர் ஒருவர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனே விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அவரை கயிற்றின் மூலம் மேலை தூக்கி காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றியதுடன் தீயணைப்பு துறையினர் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பின்னர் ஞானப்பிரகாசத்தின் மீது வழக்கு பதிவு செய்யாமல் அவரை போலீசார் எச்சரித்து விடுத்துள்ளார். துணிந்து தற்கொலை முடிவை எடுத்த இவரை சூழ்நிலை கால் அடி தண்ணீரில் அலற விட்டுள்ளது. இனிமேலாவது பிரச்சனையை கண்டு பயப்படாமல் துணிந்து அதை எதிர்கொள்வாரா என பார்ப்போம்.