மும்பையில் ஆறு மாத குழந்தையின் உயிரை பறித்த தாயின் ஹீல்ஸ் செருப்பு
விக்னேஷ் (Author) Published Date : May 08, 2018 11:21 ISTஇந்தியா
இந்த உலகம் ஒவ்வொரு நாளும் நவீன கலாச்சாரத்திற்கு அடிமையாகி கொண்டிருக்கிறது. தற்போதுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் தலையில் தேய்க்கும் ஷேம்பு முதல் காலில் போடும் செருப்பு வரை ஆடம்பரத்தை பின்பற்றுகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களில் இளமை பெண்கள் முதல் கிழவிகள் வரை தங்களை அழகு படுத்த செய்யும் வேலைகள் தாங்க முடிவதில்லை. இந்த வரிசையில் தற்போதைய தாய்மார்கள் குழந்தைகளையும் இணைத்துள்ளனர். சிறு வயதிலே குழந்தைகள் மேக்கப் இல்லாமல் வெளியிலே வருவதில்லை.
பெண்களின் மேக்கப் செலவுகளுக்கே ஆண்மார்களின் வருமானம் போதுவதில்லை. பெரும்பாலும் தற்போதைய தாய்மார்கள் தங்களுடைய அழகை பராமரிக்க தங்களது குழந்தைகளை கவனிக்க மறுக்கின்றனர். தற்போது ஒரு தாய்மாரின் ஆடம்பரத்தால் 6வயது குழந்தை பலியான சோகம் நடந்துள்ளது. பெமிதா ஷேக் (Femida Shaikh) என்ற 23 வயது பெண் தன்னுடைய முகமத் ஷேக் (Mohammed Shaikh) என்ற 6வயது கை குழந்தையுடன் தனது குடும்பத்துடன் மும்பையில் ராம்பேக் நகரில் உள்ள மெட்டாஸ்ரீ திருமண மண்டபத்தில் (Matoshree hall) நிகழ்ந்த ஒரு திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார்.
திருமணம் முடிந்து திரும்பி கொண்டிருந்த போது, இரண்டாவது மாடியில் இருந்து முதல் மாடிக்கு வரும் போது அவர் அணிந்திருந்த ஹீல்ஸ் செருப்பினால் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இரண்டாவது மாடியில் இருந்து விழுந்ததில் குழந்தைக்கு தலையில் பலத்த காயமடைந்து ரத்தம் வடிந்துள்ளது. குழந்தையின் தாயான பெமிதா ஷேக் என்பருக்கும் தலையில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு விரைந்து வந்த உறவினர்கள் குழந்தையை அருகில் இருந்த ருக்மிணிபாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தியறிந்து குழந்தையின் தாய் பெமிதா மோசமான மனநிலையில் உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழந்தையின் தாயான பெமிதா நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவர் அணிந்திந்திருந்த ஹீல்ஸ் செருப்பு அவரின் குழந்தையின் உயிரை பறித்துவிட்டது. அவரின் கணவர் மகாராஷ்டிராவில் உள்ள உல்ஹஷ் நகர் என்ற இடத்தில் ஒரு கடையில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.