ஸ்டெர்லைட் போராட்டத்தில் 6 பேர் பலி மனித உயிர்களை மதிக்காத அரசாங்கம்
வேலுசாமி (Author) Published Date : May 22, 2018 15:43 ISTஇந்தியா
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்வேறு மாவட்டங்களை கிராம மக்கள் தொடர்ந்து 100 நாட்களாக போராடி வருகின்றனர். அவர்களுடைய போராட்டங்களுக்கு ஆதரவாக எவரும் களமிறங்காமல் கண்டுகொள்ளாத நிலையில் ஆத்திரமடைந்த பொது மக்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட 144 தடை உத்தரவை மீறி பேரணியாக சென்றனர். அப்போது மூன்று மாவட்ட காவல் அதிகாரிகள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
போராட்டக்காரர்கள் கலைய கோரி எச்சரிக்கை விடுத்தும், கண்ணீர் புகை குண்டு வீசியும் களைந்து செல்லாத மக்கள், ஆட்சியர்அலுவலகத்தை நொறுக்கியும், வாகனங்களை தீ வைத்தும் எரித்தனர். இதில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய தடியடியாலும், துப்பாக்கி சூட்டினாலும் இதுவரை ஒரு பெண் உள்பட 6 பேர் அநியாயமாக உயிரிழந்துள்ளனர். ஏராளமான மக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் கலவர பூமியாக மாறிய ஸ்டெர்லைட் போராட்டம், தற்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டினாலும், தடியாடினாலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் காவல் துறைக்கு எதிராகவும், மனித உயிர்களை மதிக்காத அரசாங்கத்தை எதிர்த்தும் பல அரசியல் தலைவர்கள் பொது மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த வேறு வழியில்லை என்று தெரிவிக்கும் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் ஹச் ராஜா போன்றோர்களின் பதில்கள் மக்களை மேன்மேலும் கொதிப்படைய செய்கிறது.