Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

6 மாத காலத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் - நீதிமன்றம் அதிரடி

sand and granite quarries must be closed

புதுக்கோட்டையை சேர்ந்த ராமையா என்பவர் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல்களை தூத்துக்குடியில் நிறுத்து வைக்கப்பட்டுள்ளது. அதை எடுத்து செல்ல அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் தூத்துக்குடியில் மறித்து வைக்கப்பட்டுள்ள மணல்களை எடுத்து செல்ல அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் 6 மாத காலத்திற்குள் அனைத்து மணல் மற்றும் கிரானைட் குவாரிகளையும் மூட அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

மேலும் சமூக நலன் கருதி, இயற்கை வளங்களை பாதுகாக்க மற்றும் வருங்காலத்தை சிறப்பானதாக அமைக்க இந்த உத்தரவு போடப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மணலின் அடிப்படை தேவைக்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யலாம். இனி புதிதாக மணல் குவாரிகளை திறக்க கூடாது. அதிகரித்து வரும் இந்த மணல் கொள்ளைகளை தடுக்க அனைத்து சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமிராவுடன் ஆவணங்களை சோதனை செய்யப்படும். சட்ட விரோதமாக மணல் கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் படிப்படியாக கிரானைட் குவாரிகளையும் குறைக்க வேண்டும். 

இனி ஜல்லிக்கற்களுக்கு மட்டுமே குவாரிகளை நடத்த அனுமதி வழங்கப்படும். அதுவும் புவியிய ஆய்வாளர்களின் அனுமதி இருந்தால் மட்டுமே குவாரிகளை நடத்த அனுமதி வழங்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவிற்கு சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதிகரித்து வரும் இந்த மணல் கொள்ளை மற்றும் கிரானைட், மணல் குவாரிகளால் இயற்கை வளம் அதிக அளவில் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களிலாவது மிஞ்சி இருக்கும் இயற்கை வளத்தை பாதுகாக்கவும், இயற்கை வளத்தை அதிகரிக்க செய்யவும் மக்கள் வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர் சமூக ஆர்வலர்கள்.  

6 மாத காலத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் - நீதிமன்றம் அதிரடி