வடகிழக்கு பருவமழையால் தத்தளிக்கும் சென்னை
புருசோத்தமன் (Author) Published Date : Oct 30, 2017 17:07 ISTஇந்தியா
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர்30-இல் தீவிரமடையும் என்றும் மேலும் இது நவம்பர் 3-ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். அவர்கள் வாக்கு பலித்தது போல நேற்று இரவு முதல் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அலுவலகம் மற்றும் பள்ளிக்கூடம், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் அடையாறு, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பல பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் வானிலை ஆய்வாளர்கள் தமிழக கடலோர மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு இலங்கையில் நிலை கொண்டுள்ளதால் பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவுத்தள்ளது.தமிழகத்தில் உள் மாவட்டங்களான கன்னியாகுமாரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக பருவமழை தீவிரமடைந்துள்ளது.நாட்டில் பிற மாநிலங்களிலும் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் கடந்த சில மாதங்களாக சீனாவில் ஸ்வாலா புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்த ஸ்வாலா புயல் காரணமாக இந்தியாவில் பெருமளவு வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நாசா எச்சரித்துள்ளது.இந்த பருவமழை பெருமளவு சேதத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்த நிலையில் தற்போது சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.