Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இணையத்தில் கோயம்பத்தூர் மாநகராட்சி வீட்டு வரி செலுத்துதல்

coimbatore city corporation

தமிழ்நாட்டில் சிறந்து விளங்கும் மாவட்டங்களில் கோவை எனப்படும் கோயம்பத்தூர் குறிப்பிடத்தக்கது. கோவை மாநகராட்சியில் அதிக படியான வேலைகள் கணினி மயமாக்க பட்டுள்ளது. அவற்றில் ஒன்று வீட்டு வரி செலுத்துவது. நாம் வீட்டு வரி செலுத்துவதற்கு இனி மாநகராட்சி அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை, வீட்டில் இருந்தே கணினி அல்லது அலைபேசியில் இருந்தே பணம் செலுத்தலாம். வீட்டு வரி செலுத்துவது எப்படி என்பதை சுலபமாக கற்றுக்கொள்ளலாம். 

2022 ஆம் வருடத்தின் புதிய முறையில் கோவை Property Tax செலுத்தும் முறை இந்த தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளது.

https://tnurbanepay.tn.gov.in/IntegratedPaymentNew1.aspx

1தங்களது வீட்டு மதிப்பீட்டு (Assessment Number) எண்ணை தயாராக வைத்துக்கொள்ளவும்
2கோவை மாநகராட்சி இணையதளத்திற்கு செல்ல இங்கு குறிப்பிட்டுள்ள PAY YOUR TAX ONLINE என்ற வார்த்தையை அழுத்தவும்.
3இப்போது கோவை மாநகராட்சி இணையதளத்தில் நீங்கள் வீட்டு வரி செலுத்துவதற்கான பக்கத்தில் Service , New Assessment No. மற்றும் Payment Type பிரிவுகளை பார்க்கலாம்.
4Service பிரிவில் Property Tax தேர்வு செய்யவும்
5New Assessment no. பிரிவில் தங்களது வீட்டு மதிப்பீட்டு (Assesment Number) எண்ணை பதிவு செய்யவும்.
6Payment Type பிரிவில் உங்களிடம் பணம் செலுத்துவதற்கான வசதி உள்ள முறையை தேர்வு செய்யவும்.
7பதிவுகளை சரிபார்த்துவிட்டு VIEW பொத்தானை அழுத்தவும். சரியான பதிவுகளாக இருந்தால், உங்களின் வீட்டு மதிப்பீட்டு (Assessment Number) எண்ணை மற்றும் உங்கள் வீட்டின் விலாசத்தையும் சரியாக காண்பிக்கப்படும்.
8உங்களது வீட்டு மதிப்பீட்டு (Assessment Number) எண்ணை மற்றும் உங்கள் வீட்டின் விலாசத்தையும் சரி பார்க்கவும்.
9உங்களின் தகவல்கள்  சரியாக இருந்தால், புகைப்படத்தில் சிகப்பு அம்பு குறியிட்ட பெட்டியை தொட்டால், பணம் செலுத்துவதற்கான கட்டணம் காண்பிக்கப்படும். பின் SUBMIT பொத்தானை அழுத்தவும்
10கோவை மாநகராட்சியின் பணம் செலுத்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் காண்பிக்கப்படும்.
11தெளிவாக படித்தபின் , ACCEPT பொத்தானை அழுத்தவும்.
12இங்கு நீங்கள் தேர்வு செய்த பணம் செலுத்தும் முறையில் , பணம் செலுத்துவதற்கான உள்ளீடு துறைகளில் உங்களது வங்கியின் சரியான தகவல்களை சமர்ப்பிக்கவும். அவ்வாறு செய்தபின்  PROCEED பொத்தானை அழுத்தவும். பின் உங்கள் பணம் செலுத்துதல் வெற்றிகரமாக முடிந்தால், பணம் செலுத்தியதற்கான  ரசீது உங்களுக்கு வழங்க படும், நீங்கள் அச்செடுத்து கொள்ளலாம்.
முக்கிய குறிப்பு:கிரெடிட் கார்டில் பணம் செலுத்தும் போது உங்கள் வீட்டு மதிப்பீட்டு (Assessment Number) எண்ணை கண்டிப்பாக சரி பார்க்கவும்.

இணையத்தில் கோயம்பத்தூர் மாநகராட்சி வீட்டு வரி செலுத்துதல்