இரட்டை குழந்தைகள் சர்ச்சையில் மேக்ஸ் மருத்துவமனை உரிமம் ரத்து - சுகாதார துறை மந்திரி
வேலுசாமி (Author) Published Date : Dec 08, 2017 23:59 ISTஇந்தியா
மேக்ஸ் மருத்துவமனை டெல்லியில் உள்ள ஷாலிமார்க் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் ஒரு பெண் பிரசவத்துக்காக கடந்த 30-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. அதில் ஒரு குழந்தை இறந்து பிறந்துள்ளது. சில நிமிடங்கள் கழித்து மற்றொரு குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அதன் பின் பிறந்த மற்றொரு குழந்தையும் இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து ஒரு பிளாஸ்டிக் பையில் அந்த குழந்தையின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். குழந்தைகளின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்த பொது அந்த குழந்தையின் உடலில் அசைவு இருப்பதை கண்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
உயிருள்ள குழந்தையை இறந்துவிட்டதாக கூறிய மருத்துவமனை நிர்வாகம் மீது பெற்றோர்கள் காவல்துறை மீது புகார் செய்தனர். இந்த புகாரை விசாரிக்காமல் காவல்துறையினர் முடக்கி உள்ளனர். இதனை அடுத்து டெல்லி அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சம்பந்தப்பட்ட மருத்துவர்களை பணி நீக்கம் செய்தது. இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றொரு குழந்தையும் இறந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். தற்போது இரட்டை குழந்தை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மேக்ஸ் மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ய சுகாதார துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.