உலகில் அமைதியான நாடுகளின் பட்டியலில் 100வது இடத்தை கூட நெருங்காத இந்தியா
வேலுசாமி (Author) Published Date : Jun 11, 2018 10:26 ISTஇந்தியா
பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் உலகின் அமைதியான நாடுகள் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு பட்டியலை வெளியீட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் உலகின் அமைதியான நாடுகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. மக்களின் வாழ்க்கைநிலை, அமைதியான சூழல் போன்ற காரணங்களின் அடிப்படையில் உலகின் மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ள, மிகவும் அமைதியான நாடுகளை வரிசைப்படுத்தி இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலின்படி முதல் இடத்தில் ஐஸ்லாந்து உள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்தே முதல் இடத்தில் இருந்துவந்த ஐஸ்லாந்து இந்த வருடமும் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. இதற்கு அடுத்து நியூஸ்லாந்து, ஆஸ்திரேலியா, போர்ச்சுக்கல் மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள் அடுத்தடுத்த ஐந்து இடங்களை பிடித்துள்ளன. இந்த பட்டியலில் நமது இந்தியா முதல் 100 நாடுகளின் வரிசையில் கூட இடம்பிடிக்க வில்லை. இந்தியாவிற்கு 137வது இடம் கிடைத்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு 141இடத்தில் இருந்த இந்தியா தற்போது 4 இடங்கள் முன்னேறி 136 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சுதந்திர இந்தியாவில் தற்போது போராட்டங்கள், வன்முறை சம்பவங்கள், கொலை, கொள்ளைகள் போன்ற தீய சம்பவங்கள் அரசியல் காரணங்களால் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் தற்போது இந்தியாவில் அமைதியற்ற சூழல் உருவாகி வருகிறது. மேலும் இந்தியாவை தவிர தற்போது போர்க்களமாக, ரத்த களமாக காட்சியளிக்கும் அமைதியற்ற நாடுகளான சிரியா, ஆப்கான், ஈராக், சோமாலியா போன்ற நாடுகள் இந்த பட்டியலில் கடைசி இடங்களை பிடித்துள்ளது. இந்த நாடுகளில் கடந்த 5வருடங்களாகவே அமைதியற்ற சூழல் இருந்து வருகிறது.