Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

திருப்பூர் முதன்மை நீதிபதி அலமேலு நடராஜன் இன்று காலமானார்

Principal District Judge alamelu natarajan passed away

கடந்த திங்கள் கிழமை அன்று நீதிபதி அலமேலு நடராஜன் உடல்நல குறைவால் திருப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் உடனடியாக கோவையில் உள்ள KMCH மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் கடந்த இரண்டு நாட்களாக நுரையீரலில் ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் தற்போது காலை 9:30am மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் திருப்பூரில் முதன்மை நீதிபதியாக (Principal District Judge) பதவி வகித்தபோது, நாட்டையே திரும்பி பார்க்கும் விதமாக சங்கர் கொலைவழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தவர். இந்த வழக்கு ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வந்தது. இவர் நீதிபதியாக இருந்தபோது நேர்மையுடனும், மனிதாபத்துடனும் செயல்படுவார் என்று அனைவரிடமும் பெயரெடுத்தவர். இவருடைய சொந்த ஊர் போத்தனுர், கோவை. இவர் திருச்சியில் நீதித்துறை குற்றவியல் நடுவராக 1991-ஆம் ஆண்டு பதவியேற்றார். இவர் தனது கல்லூரி படிப்பை திருச்சி சட்ட கல்லூரியில் முடித்துள்ளார்.

முன்னதாக இவர் கோயம்பத்தூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் நீதிபதியாக பதவி வகித்துள்ளார். இதனை அடுத்து திருப்பூரில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியாக 2015-ஆம் ஆண்டு பொறுப்பேற்றுள்ளார். அப்போது தான் 2016-ஆம் ஆண்டு உடுமலைப்பேட்டை சங்கர் ஆவனக்கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நேர்மையான முறையில், அனைவரும் பாராட்டக்கூடிய வகையில் தீர்ப்பளித்துள்ளார். ஒரே வழக்கில் 6 பேர் தூக்கு மேடைக்கு சென்றது இதுவே முதன் முறையாகும். இவர் இன்று அதிகாலை உயிரிழந்ததை அடுத்து பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிபதிகள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இவருடைய இழப்பு நீதித்துறையில் அதிர்ச்சியை அளித்துள்ளது. இவரது குடும்பம் சென்னையில் உள்ளதால், சிரிது நேரம் அதிகாரிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டு பின் சென்னைக்கு செல்ல இருக்கிறார்கள். 

மூன்று நாட்களாக சிகிச்சையின் போது உடன் இருந்த நீதிபதி மோகன ரம்யா அவர்கள் கூறுகையில், "இவர் மிகவும் துடிப்பானவர், உதவும் குணம் கொண்டவர். சாதாரண உடல்நிலை பாதிப்பு காரணமாக தான் திருப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தோம் பிறகு கோவையில் அட்மிட்  செய்த பிறகும் கூட நன்றாக பேசிக்கொண்டு இருந்தார், பாதிப்பு தீவிரமடைந்ததால் இன்று அதிகாலை காலமானார். இவரின் இழப்பு சிறிதும் எதிர்பாராத ஒன்று." என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

திருப்பூர் முதன்மை நீதிபதி அலமேலு நடராஜன் இன்று காலமானார்