திருப்பதி ஏழுமலையான் கோவில் காணிக்கையில் 25 கோடி பழைய 500 1000 ரூபாய் செல்லாத நோட்டுகள்
வேலுசாமி (Author) Published Date : Mar 16, 2018 13:03 ISTஇந்தியா
பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உலகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் ஒவ்வொரு நாளும் தரிசித்து செல்கின்றனர். அவ்வாறு தரிசிக்கும் போது கடவுளுக்கு காணிக்கை செலுத்துவது வழக்கம். பக்தர்கள் செலுத்தும் இந்த காணிக்கையானது ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கை தாண்டும். இந்த கோவிலுக்கு சாமினிய பொதுமக்கள் முதல் மாபெரும் தொழிலதிபர்கள், பல்வேறு சினிமா பிரபலங்கள் வரை நேர்த்தி கடனுக்காக வருகின்றனர்.
பக்தர்கள் செலுத்தும் இந்த காணிக்கையில் செல்லாத நோட்டுகளும் இருக்கும். கடந்த 2016முதல் பிரதமர் மோடி அவர்கள் பழைய 500, 1000 ருபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்திருந்தார். இதில் பழைய நோட்டுகளுக்கு பதிலாக கலர் கலராக 10, 50, 200, 500, 2000 போன்ற நோட்டுகளை வெளியிட்டுள்ளார். இந்த நோட்டுகள் தற்போது புழக்கத்தில் விடப்பட்டு மக்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் பக்தர்கள் புத்திசாலித்தனமாக நேர்த்தி கடனுக்காக செலுத்தப்படும் காணிக்கையில் பழைய நோட்டுகளை செலுத்தி விடுகின்றனர். இது கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த பழைய நோட்டுகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தனியாக சேகரித்து வந்தனர். இந்நிலையில் தற்போது இந்த செல்லாத பழைய நோட்டுகளை கணக்கிட்டதில் 25 கோடியை தாண்டியுள்ளதாக தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் "கடந்த 2016-ஆம் ஆண்டு முதலே இந்த பழைய நோட்டுகளை தனியாக சேகரித்து வருகிறோம். இது தற்போது 25 கோடியை எட்டியுள்ளது. நேர்த்தி கடனுக்காக வரும் பக்தர்கள் காணிக்கைக்காக செலுத்தும் தொகை என்பதால் செல்லாத இந்த பழைய நோட்டுகளை செல்லத்தக்க நாடுகளாக மாற்ற ரிசர்வ் வங்கிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். பக்தர்கள் காணிக்கை தொகை என்பதால் ரிசர்வ் வங்கி இதனை அனுமதிக்க வேண்டும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.