பால் விநியோகம் செய்ய ஆவின் நிறுவனம் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது
புருசோத்தமன் (Author) Published Date : Apr 25, 2020 10:50 ISTஇந்தியா
கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக சென்னையில் பலத்த கட்டுப்பாடு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மக்களுக்கு நேரடியாக பால் மற்றும் பால் பொருட்களை எந்த ஒரு தடையுமின்றி விநியோகம் செய்ய தமிழக அரசு மூலம் ஆவின் நிறுவனம் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இது குறித்து முதல் அமைச்சர் தெரிவிக்கையில், "பால் மற்றும் பால் பொருட்களை வீடு தேடிச் சென்று விநியோகம் செய்ய ஆவின் நிறுவனம், Zomato மற்றும் DUNZO நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டுள்ளது.
24.4.2020 முதல் ஆவின் பால் மற்றும் பால்பொருட்கள் நுகர்வோர்களின் வீடுகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்படுகின்றன."
மக்கள் அனைவரும் சுயமாக செயல்பட்டால் மட்டுமே கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்கு முடியும். இதனால், மக்கள் யாரும் வெளியே வராமல் இருந்து, தேவையான அத்தியாவசிய பொருட்களை அரசின் வழிநடத்திலின் மூலம் பாதுகாப்பாக பெற்றுக்கொள்வது அவசியம்.