விமானங்களில் செல்போன் பேச தொலைத்தொடர்பு துறை ஆணையம் அனுமதி
விக்னேஷ் (Author) Published Date : May 02, 2018 14:52 ISTஇந்தியா
தற்போதைய மக்களிடையே செல்போன் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு அடிப்படை தேவையாக கருதப்படுகிறது. இதனால் தற்போது ஒரு செல்போன் இருந்தால் போதும் ஒரு மாதத்தை கூட சுலபமாக போரடிக்காமல் கடந்து விடலாம். பெரும்பாலும் மக்களுக்கு பயணத்தின் போதே செல்போன் அதிகமாக தேவைப்படுகிறது. அவசர காலத்திற்கும், நேரத்தை கழிக்கவும் பயணத்தின் போது தேவைப்படுகிறது. இத்தகைய பயணத்தின் போது தேவைப்படும் செல்போன் பயன்பாடு என்பது விமானங்களில் செல்போனில் கால் பேச, இன்டர்நெட் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது
ஆனால் தற்போது மத்திய தொலைத்தொடர்பு துறை பயணிகள் விமானங்களில் செல்போனை உபயோகிக்க அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து பேசிய விமான போக்குவரத்துதுறை அமைச்சர் சுரேஷ் பிரபு, "முன்னதாக பயணிகள் விமானங்களில் வைபை இன்டர்நெட் பயன்பாடு மற்றும் செல்போன் பேச தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தொலைத்தொடர்பு துறை ஆணையம் செல்போன் பேச அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பயணிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.
இதனை அமல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு எந்த இடையூரும் இல்லாமலும், மகிழ்ச்சியாக பயணிக்கவும் இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது இந்த திட்டத்தில் பயணிகளுக்கான கட்டணங்கள் மற்றும் விதிமுறைகள் போன்றவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.