Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

வைரலாகி வரும் கேரளா நீலாம்பூரில் பிடிபட்ட அதிசய உயிரினம்

கேரளாவில் நீலாம்பூரில் பிடிபட்டதாக கூறப்படும் அதிசய உயிரினம்.

கடந்த சில தினங்களாக ஏலியன் சார்ந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் வேற்றுகிரக வாசி உருவம் கொண்ட அதிசய உயிரினம் ஒன்று கேரளாவில் உள்ள நீலாம்பூரில் பிடிபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அதிசய உயிரினத்தின் செல்லை எடுத்து ஆராய்ந்த போது, பூமியில் உள்ள எந்த உயிரினத்திலும் ஒத்து போகவில்லை. மனிதர்கள் உண்ணும் உணவு வகைகள் எதையும் உண்பதில்லையாம்.

சூரியனில் இருந்து வரும் கதிர்வீச்சுகளை உள்வாங்கி இரவு நேரத்தில் பறக்கவும் செய்கிறதாம். இந்த தகவல் அறிந்தால் பொது மக்கள் பயப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பானதாக வைத்துள்ளதாம். மேலும் இந்த உயிரினத்தை பற்றி ஆய்வு செய்ய அடுத்த வாரத்தில் நாசா இந்தியா  வரவுள்ளதாகவும், இந்த உயிரினத்திற்கு அமெரிக்கா 7500 ட்ரில்லியன் டாலர் கொடுக்க முன்வந்ததாகவும், அதற்கு இந்தியா 18500 ட்ரில்லியன் டாலர் கொடுத்தால் மட்டுமே அதிசய உயிரினத்தை ஒப்படைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தொகை இந்தியாவுக்கு கிடைத்தால் இந்தியர்கள் பெரும் பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள் என இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது. சுமார் 3 லட்சத்திற்கும் மேலாக இந்த பூமியில் மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் கடந்த முன்னோர் காலங்கள் முதல் தற்போதைய நவீன உலகம் வரை ஏலியன் என்ற வேற்றுகிரக வாசி இருப்பதாக அதிகாரபூர்வமாக நிரூபிக்க படவில்லை. மனிதர்கள் நவீனமடைந்ததில் இருந்து தற்போது வரை ஏராளமான கிரகங்களையும், நட்சத்திரங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆனால் இன்று வரை ஏலியன் இருப்பதற்கான சான்று நிரூபிக்க படவில்லை. ஒவ்வொரு கிரகத்திலும் அதற்கான சூழ்நிலைகளுக்கேற்ப உயிரினங்கள் வாழந்து வருவதாக கூறப்படுகறியாது. ஆனால் ஆதாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால் மக்கள் மத்தியில் வேற்றுகிரக வாசி குறித்த கட்டு கதைகள் நிறைந்து காணப்படுகிறது. ஏராளமான மக்கள் பலவிதமாக கதைகளை கூறி வருகின்றனர். இதற்கான சான்று அவர்களிடமும் இல்லை. தற்போது மக்கள் மத்தியில் ஏலியன் சார்ந்த படங்களும், சூப்பர் ஹூரோ படங்களும் ஏலியன் இருக்கிறதா என்ற ஆர்வத்தை தூண்டுகிறது.

சமூக வலைத்தளங்களில் ஏதேனும் உருவத்தை வைத்து பல வித தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனிதர்கள் தற்போதுவரை கண்டிராத உருவத்தை உருவாக்கி , ஏலியன் இருப்பதாக வதந்திகளை பரப்பி வருகின்றனர். இந்த பூமியில் மனிதர்கள் கண்ணுக்கு புலப்படாத, ஆராயாத பல உயிரினங்கள் உள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்று திடீரென்று புலப்பட்டாலும் வேற்றுகிரக வாசி என்று தான் நம்மை நம்ப வைக்கும். இது குறித்த பல வதந்தியான விடீயோக்கள் சமூக வலைத்தளங்களில் இருக்கும் நிலையில் தற்போது கேராளாவில் நீலாம்பூரில் பிடிபட்டதாக சொல்ல பட்ட இந்த விடியோவும் வதந்திகளுள் ஒன்றாகவே கருதப்படுகிறது.

வைரலாகி வரும் கேரளா நீலாம்பூரில் பிடிபட்ட அதிசய உயிரினம்