Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ரஜினியை விமர்சிக்கும் பாரதிராஜா சீமான்

ரஜினியின் ட்விட்டர் கருத்தை விமர்சிக்கும் சீமான் பாரதிராஜா Imagecredit:Wikimedia @Rajnikanth_FC

சென்னையில் நேற்று ஐபில் போட்டிக்கான தடை ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு பாரதிராஜா வருத்தம் தெரிவித்தார்.

சென்னையில் இது குறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, நேற்று நடந்தது வன்மறை அல்ல. மிகவும் அறவழியிலே இந்தப் போராட்டம் நடந்தது.எங்கள் எதிர்ப்பைக்  காட்ட வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். ஆதலால், நாளை பிரதமர் வரும்போது கருப்புக்கு கோடி நிச்சயமாகக் காட்டுவோம், அவர் தமிழகத்து சாதகமாக நடந்திருந்தால், நாங்கள் சிவப்புக் கம்பல வரவேற்பு அளித்திருப்போம். மேலும், அடுத்த சென்னையில் நடக்கும் ஐபில் போட்டியில்  எங்கள் எதிர்ப்பை வேறு விதமாகக் காட்டுவோம் என்று கூறினார்.

ரஜினிகாந்த்தைப் பற்றி... 

ரஜினிகாந்த், காவலர் மீது நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். ஆனால், காவலர்கள் தடியடி நடத்தியதைப் பற்றியோ பத்திரிகையாளர்கள் தாக்கப் பட்டது பற்றியோ எந்த குரலும் எழுப்பவில்லை. மேலும் ரஜினியை யாரோ பின்னால்  இருந்து இயக்குகிறார்கள் என்றும் பாரதிராஜா குற்றம் சாட்டினார்.

காவலர் தாக்கப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானிடம் கேட்டபோது, அந்த வீடியோவில் சண்டையிடுபவர்களை நான் விலகி விடவே செய்தேன் என்று விளக்கமளித்தார்.

இந்த சந்திப்பில், MLAக்கள் தனியரசு, கருணாஸ், அன்ஸாரி ஆகியோரும் உடனிருந்தனர். பிற இயக்குனர்களான அமீர், வெற்றிமாறன் ஆகியோரும் ரஜினிக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும், காவல்துறையின் முந்தைய நடவடிக்கைகளைக் கண்டித்தும் தங்கள்   .  கருத்துகளைத் தெரிவித்தனர்.     

ரஜினியை விமர்சிக்கும் பாரதிராஜா சீமான்