Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இணையதளத்தில் இருந்து ப்ளுவேல் விளையாட்டை நீக்குவது கடினம்-மத்திய அரசு

இணையதளத்தில் இருந்து ப்ளுவேல் விளையாட்டை நீக்குவது கடினம்-மத்திய அரசு

ப்ளுவேல் (நீலத்திமிங்கலம்) என்ற விளையாட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் உலகம் முழுவதும் உள்ள சிறுவர்கள்மற்றும் இளைஞர்களின் உயிர்களை பறிக்கும் விதமாக விஸ்வரூபமெடுத்து வந்தது. இந்த விளையாட்டால் பல்வேறு இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் உயிர்கள் பறிக்கப்பட்டது. முதலில் சில இடங்களில் ஆரம்பித்த இந்த விளையாட்டு தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது. அதற்கு காரணம் சமூக வலைத்தளங்களில் இந்த விளையாட்டை பற்றி வந்த செய்திகள். இந்த செய்திகள் மூலம் அப்படி என்னதான் இந்த விளையாட்டில் இருக்கிறது  என்று பலரும் விளையாட ஆரம்பித்தனர். அதன் பின் ப்ளுவேல் விளையாட்டின் பலி எண்ணிக்கை உயர ஆரம்பித்தது. இந்த விளையாட்டில் மொத்தமாக 50 தினங்கள் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சவால்கள் கொடுக்கப்பட்டு அந்த புகைப்படத்தை ப்ளுவேல் நிர்வாகிக்கு அனுப்ப வேண்டும்.

முதலில் சிறு சிறு சவால்களாக ஆளில்லாத நேரத்தில் பேய் படம் பார்ப்பது, கையில் ப்ளுவேல் திமிங்கலத்தை கத்தியால் வரைவது போன்ற சவால்கள் கொடுக்கப்படும். பின்னர் இரவு நேரத்தில் சுடுகாட்டிற்கு செல்வது, வேகமாக ரயில் வரும்போது செல்பி எடுப்பது போன்று அடுத்தடுத்து ஆபத்தான சவால்களை தந்து விளையாடுபவரை விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உள்ளவராக மாற்றி கடைசி 50 வது நாளில் உயரமான கட்டிடத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளும் முன் செல்பி எடுக்க வேண்டும் என்று ஆபத்தான சவாலை விடுத்து உயிரை பறித்து கொள்ளும். இந்த விளையாட்டை பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளுவேல் விளையாட்டால் அடிமையானவர்களை மீட்கும் விதமாக போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த வகையான ஆபத்தான விளையாட்டை இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், வாட்சப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் ப்ளுவேல் விளையாட்டு பகிர படுவதால் முழுமையாக இணையத்தில் இருந்து இந்த ப்ளுவேல் விளையாட்டை நீக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இணையதளத்தில் இருந்து ப்ளுவேல் விளையாட்டை நீக்குவது கடினம்-மத்திய அரசு