இரு சக்கர வாகனம் மற்றும் சிறிய கார் பிரிவுகள் COVID-19 க்குப் பின் அதிகரிக்கும்
புருசோத்தமன் (Author) Published Date : Apr 15, 2020 19:46 ISTஇந்தியா
கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தையும் கிட்டத்தட்ட அளித்துவிடத்து என்றே கூறலாம். ஆனால் பேரழிவுக்கு மத்தியில் வாகனத் தொழிற்சாலைகளுக்கு அதாவது, கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதிகம் விற்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
இப்பொழுது இருக்கும் சூழலில், சமூக தூரம் கடைபிடிப்பது மிகவும் அவசியமான ஒன்று. பெரும்பாலும் மக்கள் சமூக தூரத்தை கடைபிடிக்கவில்லை என்றாலும், தினமும் அலுவலகங்களுக்கு அரசு அல்லது தனியார் பொது பேருந்துகளில் செல்பவர்கள் கண்டிப்பாக, ஊரடங்களிற்கு பின் யோசிக்க தொடங்குவார்கள்.
கொரோனா விழிபுணர்வு கொண்ட இவர்களால் பொது போக்குவரத்து பேருந்துகளில் செல்வது கடினம், இவர்கள் பாதுகாப்பு காரணமாக சொந்த வண்டிகளில் சென்று வர திட்டமிடுவார்கள். ஏற்கனவே வாகனங்கள் உள்ளவர்கள் செல்லும் நிலையில், சொந்த வாகனம் இல்லாதவர்கள் புதிய சிறிய இரு சக்கர வாகனங்கள் அல்லது வசதிக்கேற்ப சிறிய வகை கார்கள் வாங்கும் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஹீரோ மோட்டோகார்ப் தலைவர் பவன் முஞ்சல் மற்றும் மஹிந்திரா - மஹிந்திரா தலைவர் பவன் கோயங்கா ஆகியோர் கருத்து தெரிவிக்கையில்,
நெருக்கடி ஏற்பட்ட பின்னரும் மக்கள் தொடர்ந்து சமூக தூரத்தை பின்பற்றுவார்கள். இது அவர்கள் பயணிக்கும் வழியில் மாற்றத்தை ஏற்படுத்தும். தினசரி பயணிகள் பொது போக்குவரத்தை தவிர்க்க முயற்சி செய்யலாம் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கு வரும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும், என தெரிவித்துள்ளனர்.