Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

காவிரி வரைவு செயல் திட்டத்தை மே 3ம் தேதிக்குள் அமல்படுத்த உத்தரவு

காவிரி வரைவு செயல் திட்டத்தை மே 3ம் தேதிக்குள் அமல்படுத்த உத்தரவு

காவிரி நதிநீர் வாரியம் தொடர்பான தமிழக அரசின் மனு மீதான விசாரணையில் காவிரி வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு மே 3-குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேலும் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும் கூறியுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி மதம் கர்நாடக மாநிலத்தின் குடிநீர் தட்டுப்பாட்டை குறிப்பிட்டு உச்சநீதி மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் காவிரி நடுவர் மன்றம் அறிவித்த நீர் அவவோடு சேர்த்து 14.75 TMC காவிரி நீரை கூடுதலாக அம்மாநிலத்திற்கு ஒதுக்கியது. தமிழகத்திற்கு ஏற்கனவே நடுவர் மன்றம் அறிவித்த 192.0 TMC-யை குறைத்து 177.25 TMC-ஆகா வழங்கியது. மேலும் மத்திய அரசு உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற ஒரு ஸ்கீம் அமைக்குமாறு உத்தரவிட்டது. அதை ஆறு வார காலத்திற்குள் அமைக்கவும் அறிவுறுத்தியது.

உச்சநீதி மன்றம் அறிவுறுத்திய ஸ்கீம் என்ற வார்த்தை காவிரி மேலாண்மை வாரியம்தான் என்றும் அதனை உடனடியாக அமைத்திட வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுவந்த நிலையில் மத்திய அரசும் கர்நாடக அரசும் ஸ்கீம் என்றால் மேலாண்மை வாரியம் இல்லை என்று வாதிட்டு வந்தது. 

இந்நிலையில் உச்சநீதி மன்றம் அளித்த ஆறு வர காலக்கெடு முடிந்தும் மத்திய அரசு உச்சநீதி மன்றம் குறிப்பிட்ட ஸ்கீமையோ, மேலாண்மை வாரியாதையோ அமைப்பதற்கான வழிவகை செய்யாமல் மீண்டும் உச்சநீதி மன்றம் குறிப்பிட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டும் மனு தாக்கல் செய்தது.

இதனிடையே மத்திய அரசை கண்டித்து தமிழகம் புதுச்சேரி முழுவதும் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மேலும் தமிழக அரசின் சார்பில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் மீது வழக்கு தொடரப்பட்டது. புதுச்சேரி அரசு சார்பில் மத்திய அரசு மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இவ்வழக்குகள் அனைத்தும் மார்ச் 29 முதல் 31-குள் தொடரப்பட்டது எனவே அவ்வழக்குகள் யாவும் இன்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. 

இன்றைய விசாரணையின் இறுதியில் மே 3-குள் மத்திய அரசு காவிரி வரைவு செயல் திட்டம் 'scheme' குறித்த வரைவுகளை சமைப்பிக்க வேண்டும் என்றும், இரு மாநிலங்களுக்கும் பாதிப்பும் ஏதும் இல்லாமல் காவிரி நீரை பங்கீடுவதில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தாகவேண்டும் என்று கூறி வழக்கை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார் தலைமை நீதிபதி. 

காவிரி வரைவு செயல் திட்டத்தை மே 3ம் தேதிக்குள் அமல்படுத்த உத்தரவு