மனித உரிமைகளை உணர்த்த சென்னையில் மாரத்தான்
ராசு (Author) Published Date : Dec 10, 2017 16:28 ISTஇந்தியா
1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாளை குறிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 10-ஆம் தேதி மனித உரிமை நாளாக கொண்டாடப்படுகிறது. ஜாதி, மதம், இனம், மொழி, பாலினம் போன்ற எந்தவித பாகுபாடின்றி மனிதன் வாழ்வதன் அவசியத்தை மனிதர்களுக்கு உணர்த்தவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தற்போது மக்களுக்கு மனித குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக சென்னையில் மாரத்தான் ஓட்ட பந்தயத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாரத்தானில் 1500 பேர் கலந்து கொள்கின்றனர். இந்த மாரத்தான் போட்டியை என்.சி.சி துணை தலைமை இயக்குனர் விஜேஸ் கே கார்க் தொடங்கி வைத்தார். அவருடன் இணைந்து சிஎஸ்எப் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.