செயின் திருடனை துரத்தி பிடித்த சிறு வயது காவலன் சூர்யாவுக்கு காவல் ஆணையர் பாராட்டு
வேலுசாமி (Author) Published Date : Apr 19, 2018 15:55 ISTஇந்தியா
தற்போது சென்னை உள்ளிட்ட நகர் புறங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இது போன்ற சம்பவங்களால் மக்கள் வெளியில் வரவே பயப்படுகின்றனர். சையின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் இளைஞர்கள், திருட்டை தொழிலாக வைத்திருப்போர், சோற்றுக்காக திருடுபவர் என பல நோக்கங்களுக்காக திருடுகின்றனர்.
இது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு பொது மக்கள் கண்டுகொள்ளாமல் அவரவர் போக்கில் செல்வதே காரணம் என்ற கருத்தை காவல் அதிகாரிகள் முன்வைத்துள்ளனர். அது பெரும்பாலும் உண்மை தான். ஆனால் தற்போது சிறு வயது இளைஞர் ஒருவர் செயின் பறித்து சென்ற திருடனை தனியாக துரத்தி பிடித்துள்ளார். இவரின் இந்த துணிச்சலுக்கு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
அமுதா என்ற பெண் மருத்துவர் சென்னை அண்ணா நகரில் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவரது கிளினிற்கு வாலிபர் ஒருவர் முகத்தை மறைத்து அமுதா என்ற மருத்துவர் அணிந்திருந்த சங்கிலியை பறித்து கொண்டி ஓடினார். பிறகு அமுதாவின் அலறல் கேட்டு சூர்யா என்ற சிறுவனும் அவரது நண்பரும் திருடனை மடக்கி பிடித்துள்ளனர். இவரின் இந்த வீர தீர செயலுக்கு காவல் ஆணையர் எஸ்கே விஸ்வநாதன் தற்போது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். செயின் பறித்து சென்ற இளைஞரை பிடிக்க நான் முயன்ற போது பொதுமக்கள் யாரும் உதவ முன்வரவில்லை என சிறுவன் சூர்யா தெரிவித்துள்ளார்.