Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கல்லூரி மாணவன் உயிருக்கு ஆபத்தாக மாறிய டேட்டிங் நட்பு

டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான நண்பனால் டெல்லியில் கல்லூரி மாணவருக்கு ஏற்பட்ட சோகம். Photo Credit - ayush.nautiyal.94 (Facebook)

டெல்லியில் ராம்லால் ஆனந்த் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வணிகவியல் படித்து வருபவர் ஆயுஷ். இவருக்கு வயது 21. இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீடு திரும்பாத காரணத்தால் அவருடைய பெற்றோர்கள் தேடியும் கிடைக்காததால் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். இதன் பிறகு அவருடைய பெற்றோர்களுக்கு ஆயுஷ் கடத்தப்பட்டிருப்பதாகவும், 50 லட்சம் பணம் தரவேண்டும் என்றும் ஆயுஷ் மொபைலில் இருந்து செய்திகள் வந்துள்ளது.

இதனை நம்பி அவருடைய பெற்றோரும் பணத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் சொன்ன இடங்களுக்கெல்லாம் அலைந்துள்ளனர். ஆனால் பணத்தை எடுக்க எவரும் வராததால் ஆயுஷின் பெற்றோரும், காவல் துறையினரும் குழம்பி போயினர். இந்நிலையில் ஆயுஷ் கடந்த புதன் கிழமை அன்று ஒரு டிராவல் பையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனை அறிந்து அவருடைய பெற்றோர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இதனை அடுத்து போலீசார் பெற்றோர்களுக்கு வந்த செய்திகளின் அடிப்படையில் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விசாரணையில் ஆயுஷ் கடத்தப்பட வில்லை, கொல்லப்பட்டிருக்கிறார் என்று தெரியவந்தது. மேலும் இவரை கொன்றது அவருடைய டேட்டிங் நண்பனான இஷ்தயாக் அலி என்பதும் தெரியவந்தது. இஷ்தயாக் அலி, உத்தம் நகரில் டிசைனராக ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வயது 25. இவருக்கும், கொலை செய்யப்பட்ட ஆயுஷுக்கும் ஆண்டிராய்டு மொபைலில் இயங்கும் 'டேட்டிங் (Dating App)' செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஆயுஷை சுத்தியால் அடித்து கொண்டிருக்கிறார். இஷ்தயாக் அலி கொலை செய்ய காரணம் என்ன? என்பதன் அடிப்படையில் தற்போது போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி இளைஞர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளம் மற்றும் டேட்டிங் போன்ற செயலிகளில் மூலம் ஏற்படும் முகம் தெரியாத பழக்கத்தால் கல்லூரி மாணவர் ஆயுஷின் உயிர் பறிபோனது.

இதற்கான காரணம் தற்போதுள்ள இளைஞர்கள் ஆண்டிராய்டு மற்றும் லேப்டாப்பில் முடங்கி கிடப்பதே. மாணவர்கள் தங்களுடைய இளமை பருவத்தை முறையான பாதையில் செலுத்தினால் வாழ்க்கையின் வெற்றியை அடைவார்கள். ஆனால் தற்போதுள்ள மாணவர்கள் பாதையை தீய பழக்கங்கள் மற்றும் தகாத நட்பு போன்ற பாதையில் செலுத்துவதால் அவர்களுடைய வாழ்க்கை பாதியிலே முடிந்து அவர்களை நம்பியுள்ள குடும்பமும் நடுத்தெருவில் நிற்கிறது. 

கல்லூரி மாணவன் உயிருக்கு ஆபத்தாக மாறிய டேட்டிங் நட்பு