கைதானார் தாவூதின் கைக்கூலி பாரூக் தக்லா
கோகுல் சரவணன் (Author) Published Date : Mar 09, 2018 00:14 ISTஇந்தியா
கைதானார் தாவூதின் கைக்கூலி பாரூக் தக்லா
இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.1993, மார்ச் 12, பம்பாயின் தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய பாரூக் தக்லா எனப்படும் மொஹம்மத் பாரூக்-ஐ போலீசார் இன்று கைது செய்துள்ளனர். தக்ல நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமின் முக்கியமான கூட்டாளி எனவும் பொலிஸார் தெளிவுபடுத்தினார்.
துபாயில் கைது செய்யப்பட்ட தக்லா இப்போது மும்பை கொண்டுவரப்படுகின்றான். மும்பை போலீசார் பாரூக்கை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாகவும், அவர் மீது பயங்கரவாதம் மற்றும் சீற்குலைப்பு நடவடிக்கை தடுப்பு சட்டமான தடா (Terrorist and Disrutive activity prevention act) TADA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
1993-ஆம் ஆண்டு மும்பையின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 12 வெடிகுண்டுகள் வெடித்தது. இருநூற்று ஐம்பதுக்கும் அதிகமானோர் அந்த குண்டு வெடிப்பில் பலியாகினர் அதுமட்டும் அல்லாமல் நூற்று ஐம்பதிற்கும் மேலான அப்பாவிகள் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாரூக்கும் அவனது சகோதரனும் வெடிகுண்டுகளை சரியான இடத்திற்கு கொண்டுசெல்வதற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்று மும்பை போலீஸ் உறுதி செய்துள்ளது.