ஆந்திர தலைநகர் அமராவதியில் புதிய தலைமை கட்டிட வடிவமைப்பில் இயக்குனர் ராஜமௌலி
வேலுசாமி (Author) Published Date : Dec 15, 2017 22:39 ISTஇந்தியா
பாகுபலி படத்தின் மூலம் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமௌலி. இவரின் நுன்னதமான திறமையினால் படத்தில் பல நுண்ணிய கலைகளை மேற்கொண்டிருந்தார். இந்த படத்தினை பார்த்த ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு ஆந்திர தலைநகர் அமராவதியில் ஒரு புதிய கட்டிடத்தை கட்டுவதற்கான வடிவமைப்பு திட்டத்தை இயக்குனர் ராஜமௌலி பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. இந்த தகவல் முன்பே வெளிவந்திருந்தது.
இந்நிலையில் ஆந்திர அரசுக்கான புதிய தலைமை கட்டிட வடிவமைப்பு கொண்ட வரைபடத்தை இயக்குனர் ராஜமௌலி ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு விடம் வழங்கியுள்ளார். லண்டனை சேர்ந்த புகழ் பெற்ற கட்டிட வடிவமைப்பாளரை கொண்டு புதிய தலைமை செயலகம் மற்றும் உயர்நீதி மன்ற கட்டிடத்திற்கான வடிவமைப்பும் தயார் செய்யப்பட்டுள்ளது. ராஜமௌலி ஆலோசனை படி வடிவமைக்கப்பட்ட வரைபடத்தை காண்பித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் அந்த நிறுவனர் விளக்கினார்.
கிருஷ்ணா நதிக்கரையில் அமராவதியில் 11 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் தலைமை செயலகம் கட்டப்பட உள்ளது. இதில் 750 சதுர மீட்டர் பரப்பளவில் தலைமை செயலகமும் 210 அடி உயரத்தில் கண்காணிப்பு கேமிராவும் அமைய உள்ளது. தலைநகரின் முழு அழகையும் பொது மக்கள் காணும் அமைப்பாக இந்த கண்காணிப்பு கேமரா அமைய உள்ளது.