தூத்துக்குடியில் கரை ஒதுங்கிய டால்பின்ஸ்
வேலுசாமி (Author) Published Date : Nov 28, 2017 17:49 ISTஇந்தியா
நேற்று இரவு தூத்துக்குடியில் 30 கும் மேற்பட்ட டால்பின்கள் கரை ஒதுங்கியுள்ளது. இதேபோல் 1974 ஆம் ஆண்டு 70 பைலட் திமிங்கலங்கள் கரை ஓதுங்கின. இதனை தொடர்ந்து கடந்த வருடம் 83 பைலட் திமிங்கலங்கள் அதே கடற்கரையில் கரை ஒதுங்கியது. இதனை அடுத்து நேற்று இரவு 6 மணிக்கு 30 கும் மேற்பட்ட டால்பின்கள் தூத்துக்குடியில் உள்ள புன்னைக்காயல் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது. இதனை முதலில் கண்ட மீனவர் அருகில் இருந்த வனத்துறை அதிகாரிகளுக்கு இதனை தெரியப்படுத்தியுள்ளார். விரைந்து வந்த அதிகாரிகள் கரை ஒதுங்கிய டால்பின்களை மீண்டும் கடலுக்குள் விட முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் அதில் 4 டால்பின்கள் இறந்துள்ளது.
இதனை அடுத்து டால்பின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த டால்பின்கள் எதற்காக கரை ஒதுங்கியது 4 டால்பின்கள் இறந்ததற்கு என்ன காரணம் என்பது பற்றி தகவல்களை வனத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரி எஸ்.லோகசுந்தரம் கூறியது "இந்த சம்பவம் சாதாரணமானது அல்ல. விரைவில் இந்த டால்பின்கள் எதற்காக கரை ஒதுங்கியது. இறந்ததற்கான காரணம் என்று விரைவில் அறிவிப்போம். பரிசோதனை முடிவு தெரிந்த பின்னர் தான் ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியும்." என்று தெரிவித்துள்ளார். கடல்வாழ் உயிரினங்களில் டால்பின்கள் கரை ஒதுங்குவது மிகவும் அரிதானது.
இது குறித்து கடல் உயிரியல் நிபுணர் முரளிதரன் கூறுகையில் "பொதுவாக டால்பின்கள் கடல் மேற்பரப்பில் இருந்து சுமார் 50 மீ ஆழத்தில் காணப்படும். பிரேத பரிசோதனை முடிவு வெளிவந்த பின்னர் தான் தெளிவான முடிவை எடுக்க முடியும். இதை மிக எளிமையாக நாம் ஊகிக்க முடியாது." என்று தெரிவித்துள்ளார். கடல்வாழ் உயிரினங்கள் கடலில் பெரிய சத்தம் அல்லது கடல் நிலைப்பாட்டில் ஏதாவது அசைவு ஏற்பட்டால் அதற்கு அஞ்சி கடல்வாழ் உயிரினங்கள் கடற்கரையை நெருங்குகிறது. இது போன்ற சம்பவங்கள் இந்த ஆண்டில் அதிக அளவில் நிகழ்ந்துள்ளது. இந்த டால்பின்கள் இந்தியா பெருங்கடலை சேர்ந்தவை. இதனால் இந்தியா பெருங்கடலை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் ஏதோ அசம்பாவிதம் நடப்பதாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.