Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இனி அனைத்து 4-சக்கர வாகனங்களில் 'பாஸ்ட் டேக்' பொருத்த வேண்டும் - மத்திய அரசு

இனி அனைத்து 4-சக்கர வாகனங்களில் 'பாஸ்ட் டேக்' பொருத்த வேண்டும் - மத்திய அரசு

டிசம்பர் 1-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களிலும் FastTag எனப்படும் கருவியை பொருத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சுங்க சாவடிகளில் நான்கு சக்கர வாகனங்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் எரிபொருள் வீணாவத்தோடு அதிக நேரமும்  வீணடிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டுவந்த நிலையில் தற்போது மத்திய அரசு  FastTag (RFID – radio-frequency identification device) எனப்படும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவியின் மூலம் சுங்கச்சாவடியை வாகனங்கள் கடந்துசெல்லும்போது அங்கே பொறுத்தப்பட்டுள்ள சென்சார் கருவிகள் மூலம் வாகன ஓட்டிகளில் FasTagல் இருந்து சுங்கக்கட்டணத்தை Online மூலம் Transfer செய்துகொள்ளலாம். 

ஒவ்வொரு முறையும் சுங்கச்சாவடியை கடக்கும்போது தானியங்கி முறையில் சுங்கக்கட்டணம் வசூல் செய்துக்கொள்ளப்படும். இந்த கருவியினால் வாகன ஓட்டிகள் prepaid முறையில் FastTag கணக்கில் பணம் வைத்துக்கொள்ளலாம். இந்த கருவியை வாகனங்களின் முன்பக்க கண்ணாடியின் மையப்பகுதியில் பொறுத்த வேண்டும் . மேலும் ஏற்கனவே 4-சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் சுங்கச்சாவடி மையங்களில் (NHAI toll booth) வாகனப்பதிவுச் சான்றிதழ், ஆதார் எண், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களைக்கொண்டு இக்கருவியை வாங்கிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இனி அனைத்து 4-சக்கர வாகனங்களில் 'பாஸ்ட் டேக்' பொருத்த வேண்டும் - மத்திய அரசு