Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பிரதமர் மோடிக்கு எதிரான திரும்பி போ மோடிமுழக்கம் ட்விட்டரில் உலகளவில் முதலிடம்

ட்விட்டரில் உலகளவில் முதலிடம் பிடித்த தமிழர்களின் திரும்பி போ மோடிமுழக்கம் Imagecredit:@divakarantmr @narendramodi

இராணுவக் கண்காட்சியை தொடக்கி வைக்கவும் அடையார் புற்றுநோய் மருத்துவமனை வைர விழாவைச் சிறப்பிக்க தமிழகம் வந்த பிரதமர் மோடியை எதிர்த்து கருப்பு ஆடைகள் உடுத்தியும் கருப்பு கொடிகள்  ஏந்தியும் கருப்பு பலூன்கள் பறக்கவிட்டும்   பல போராட்டங்களை அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் காலை முதலே நடத்தி வருகின்றன. 

முன்னதாக,  சென்னையில் நடைபெறவிருந்த ஐபில் போட்டிகள் பூனேவுக்கு  இடமாற்றம் செய்யப்படும் என  ஏப்ரல் 10 ஆம் தேதி பிசிசிஐ அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலம் தமிழர்களின் காவிரிக்கான போராட்டத்தை  இந்திய நாட்டின் பிற மாநில மக்கள் உணர்ந்துள்ளனர். இதற்கு முன்பாக, ஜல்லிக்கட்டுக்கு நடந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.  

இதை உத்வேகமாகக் கொண்டு இன்று மீண்டும் சென்னை உட்பட மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் பலர் சாலை மரியல்களிலும் ரயில் மரியல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஊடக வாயிலாகவும், சமூக வலைதளங்களிலும்  தங்கள் எதிர்ப்புகளைக் காண்பித்து வருகின்றனர். இதன் உச்சகட்டமாக, இன்று ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருக்கும் "மோடியே திரும்பி போ" என்ற முழக்கம் உலகையே  தமிழகத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இந்திய நாட்டின் பிரதமர் மோடி சென்னைக்கு வந்த நோக்கம் கூடப் பகிரப்படாமல், பிரதமர்  வருகைக்கான எதிர்ப்பை தமிழர்கள் பலர் ட்விட்டர் மூலம் மீம்ஸ்களாகவும்  முழக்கங்களாகவும்  வைரலக்கிக்கொண்டு இருக்கிறார்கள். இத்தகைய உலகளாவிய எதிர்ப்பின் மூலம் தமிழர்கள் வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிரதமர் மோடிக்கு எதிரான திரும்பி போ மோடிமுழக்கம் ட்விட்டரில் உலகளவில் முதலிடம்