இமான் அண்ணாச்சி தொடங்கியுள்ள இணைந்த கைகள் அறக்கட்டளை
மீனா ஸ்ரீ (Author) Published Date : Nov 24, 2017 22:23 ISTஇந்தியா
காமெடி நடிகர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இமான் அண்ணாச்சி விளங்குகிறார். இவர் சொல்லுங்கன்னே சொல்லுங்க, குட்டி சுட்டிஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இவர் முதலில் மக்கள் தொலைக்காட்சியில் சொல்லுங்கன்னே சொல்லுங்க நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆரம்பித்தார். பிறகு இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்ப்பை அடுத்து சன் தொலைக்காட்சியில் இதே தலைப்பில் தொகுப்பாளராக வளம் வந்தார். முதல் முதலில் ஒரு நடிகராக காதல் படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் பல்வேறு நடிகர்கள், நடிகைகள் சாதாரண மக்களின் நலத்திட்ட உதவிகளுக்காக பல்வேறு அமைப்புகளை கையாண்டு வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது இமான் அண்ணாச்சி தனது அடியை எடுத்து வைத்துள்ளார்.
இமான் அண்ணாச்சி கடந்து வந்த பாதையை பற்றி கூறும்போது "சின்னத்திரை மற்றும் சினிமாவிற்கு வருவதற்கு முன் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்தேன். அப்போது தள்ளுவண்டிக்கு வாடகை கொடுக்க முடியாமல் தவித்தேன். யாராவது ஒரு பழைய தள்ளுவண்டியாவது வாங்கி தரமாட்டார்களா என்று ஏங்கினேன். இதனால் நான் பட்ட கஷ்டத்தை யாரும் படக்கூடாது என்பதற்காக இணைந்த கைகள் என்ற அறக்கட்டளையை துவங்கியுள்ளேன். பள்ளி மாணவர்களுக்கு கல்லூரி படிப்பிற்கு உதவுவது, சாமானிய மக்களின் அடிப்படை தேவைக்காக சிறுதொழில் தொடங்க உதவுவது போன்றவைதான் இந்த அறக்கட்டளையின் முக்கிய நோக்கமாகும்." என்று தெரிவித்துள்ளார்.