இந்தியாவில் ஊரடங்கு தொடர்ந்தால் எந்த மாதிரியான கட்டுப்பாடுகள் இருக்கும்
புருசோத்தமன் (Author) Published Date : Apr 11, 2020 23:59 ISTஇந்தியா
இந்தியாவில் ஊரடங்கு தொடர்ந்தாலும் பிரதமர் மற்றும் மந்திரிகள் அலுவலகங்கள் இயங்க வாய்ப்பு: இன்று அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் வீடியோ மூலம் நடந்த கலந்துரையாடலில், பிரதமர் மோடி மேலும் இரண்டு வாரம் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியானது.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சர்கள் கவுன்சில் மற்றும் அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் திங்கள்கிழமை முதல் தங்கள் அமைச்சகங்களில் பணியைத் தொடங்குவார்கள் என செய்திகள் வந்துள்ளது.
உத்தியோகபூர்வ போக்குவரத்துகளுக்கு தகுதியான மூத்த அதிகாரிகள், அதாவது, இணைச் செயலாளர் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் வழக்கம்போல அறிக்கை அளிப்பார்கள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. ஜூனியர் அதிகாரிகள் சுழற்சி அடிப்படையில் தொடர்ந்து பணியாற்றுவார்கள்.
ஊரடங்கால் மிகவும் பாதிப்படைந்து இருக்கும் பொருளாதாரத்தைத் எப்படி விரைவாக சீரமைப்பது என்பதை அமைச்சக அதிகாரிகள் நல்ல யோசனைகளுடன் வர உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது. அலுவலகத்திற்கு வரும் அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக சமூக தூரத்தை (சோசியல் டிஸ்டன்சிங்) முறையை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் வலியுரித்துள்ளார்.
ஊரடங்கின் நீட்டிப்பு பொருளாதாரத்தை விரைவாக செயல்படுத்த சில கட்டுப்பாடுகளுடன் வரும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் மக்கள் பாதுகாப்பாக வீட்டிலே இருக்க தேவையான காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை பாதுகாப்பாக பெறவும் கட்டுப்பாடுகள் இருக்கும் என தெரிகிறது.
கட்டுமானத் துறையை மையப்படுத்தி அதிக தின கூலி வேலையாட்கள் இருப்பதால், இவர்கள் பல மாநிலங்களில் இருந்து செயல் படுவதால், இவர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இவர்களையும் மிகுந்த கட்டுப்பாட்டில் இயக்கப்பட்டால் கண்டிப்பாக இவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் சுலபமாக சமநிலைக்கு விரைவில் வர வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது.
சில வகைகளில் முறை செய்யப்பட்ட ஊரடங்கு வந்தால், மக்கள் பாதுகாப்பாகவும் மற்றும் தங்களது வாழ்கை முறையை திரும்ப பெற உதவியாக இருக்கும் ஆனால், அரசாங்கம் செயல்படுத்தும் சமூக தூரத்தை அனைவரும் கடைபிடித்தால் மட்டுமே கொரோனா வைரஸை ஒழிக்க முடியும்.