ராணுவ நிதி ஒதுக்கீட்டில் டாப் 5 பட்டியலில் இடம்பிடித்த இந்தியா
வேலுசாமி (Author) Published Date : Feb 16, 2018 11:44 ISTஇந்தியா
உலக நாடுகள் தங்கள் பட்ஜெட்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்துக்காக பெரிய தொகையை ஒதுக்குகிறது. சர்வதேச மூலாதார ஆய்வு நிறுவனம் இது குறித்த பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்நிறுவனம் ‘ராணுவ ஒதுக்கீடு 2018’ என்ற புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ‘டாப் 5’ முதன் முறையாக இடத்தில் இந்தியா இடம் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா 2017-ஆம் ஆண்டில் ராணுவத்திற்காக 40 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதனை தொடர்ந்து இரண்டாவது இடத்தில 10 லட்சம் கோடி நிதி ஒதுக்கீட்டில் சீனா பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் சவுதி அரேபியா 4.9 லட்சம் கோடி ருபாய் நிதி ஒதுக்கீட்டில் மூன்றாம் இடத்தையும், 3.9 லட்சம் கோடி ரூபாயுடன் ரஷியா நான்காம் இடத்தையும் பிடித்துள்ளது.
இந்த பட்டியலின் ஐந்தாம் இடத்தை இந்தியா பிடித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் ராணுவத்துக்கு இந்தியா 3.3 லட்சம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் முந்தைய ஆண்டை விட 2.4 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கியுள்ளது. கடந்த ஆண்டு ஐந்தாம் இடத்தில் இங்கிலாந்து இருந்தது. ஆனால் தற்போது இங்கிலாந்து ஆறாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் இங்கிலாந்து 3.35 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
ஆனால் 2017 இல் 3.24 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளது. இந்த அறிக்கையில் சீனா, இந்தியாவை விட பலம் வாய்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. சீனா, இந்தியாவை விட அதிக போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், கருவிகள் மற்றும் இந்தியாவை விட கூடுதலாக 6 லட்சம் வீரர்களை சீனா வைத்துள்ளது. மேலும் இந்தியா தற்போது பாதுகாப்பு படைகளை நவீன மையமாக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மூலாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்ட பட்டியல் :
1.அமெரிக்கா
2.சீனா
3.சவுதி அரேபியா
4.ரஷியா
5.இந்தியா
6.இங்கிலாந்து
7.பிரான்ஸ்
8.ஜப்பான்
9.ஜெர்மனி
10.தென் கொரியா
11.பிரேசில்
12.ஆஸ்திரேலியா
13.இத்தாலி
14.இஸ்ரேல்
15.ஈராக்.