இலங்கையில் கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ள முத்துபந்திய தீவு
வேலுசாமி (Author) Published Date : Apr 23, 2018 12:46 ISTஇந்தியா
கடந்த சில தினங்களாக தமிழக கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது. இதனால் தென் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடலில் ஏற்படும் இயற்கை மாற்றம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இதனால் கடலோர மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
மேலும் கடலோரத்தில் இருக்கும் மக்கள் கடல் கொந்தளிப்பினால் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தை விட இலங்கையில் கடல் சீற்றம் உச்ச நிலையை அடைந்துள்ளது. கடல் அலைகள் அதிகப்படியான உயரத்திற்கு மேலெழும்பி பொது மக்களை அச்சமடைய செய்துள்ளது. கடல் மட்டம் அதிகரித்துள்ளதால் கடல் நீர் மக்கள் வசிக்கும் வீடுகளிலும், தெருக்களிலும் உட்புக ஆரம்பித்துள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து முத்துபந்திய தீவானது 500 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த தீவில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது இந்த தீவானது கடல் அரிப்பு காரணமாக அழியும் அபாயத்தை அடைந்துள்ளது. கடல் கொந்தளிப்பு மற்றும் உயர்மட்ட அலைகள் காரணமாகவும் அதிகரித்து வரும் கடல் மட்டத்தினாலும் இந்த தீவானது கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.